Friday, February 9, 2018

102. வாராய் என்தோழி வாராயோ(வாராய் என்தோழி வாராயோ) **

வாராய் என்-தோழி வாராயோ நல்-வாழ்த்துப் பாட வாராயோ (2)
பொதுச்சேவை தன்னை இனிதே-பூணும் இளையோரைப்-பாட வாராயோ
வாராய் என்-தோழி வாராயோ நல்-வாழ்த்து பாட வாராயோ

(மந்த்ரம்-1)
(1:30 to 1:46à16 Seconds)

ஓம் கணாநாம்த்வா கணபதிகும் ஹவா மஹே 
கவிம்கவீணா முபமச்ரவஸ்த்தமம்
ஜ்யேஷ்ட-ராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணச்பத-ஆனஸ் 
ச்ருந்வன்ந்நோதிபி: சீதசாதனம் 
மஹா கணபதயே நமஹ
(MUSIC)
நெடுங்காலச் சங்கம்-கதிரே புதுப்-பொலிவாக உரமும்-இவரே
எதிர்காலச் சங்கம்-எதிரே பொது நலம்-காக்கும் அரணின்-சுவரே
எனப்-பாட நாவும் சிறக்காதோ புதிதாக-வேகம் பிறக்காதோ
எனப்-பாட நாவும் சிறக்காதோ புதிதாக-வேகம் பிறக்காதோ
வாராய் என்-தோழி வாராயோ நல்-வாழ்த்து பாட வாராயோ
(மந்த்ரம்-2)
(2:30 to 2:46à16 Seconds)
 யோ’‌உபாம் புஷ்பம் வேத’ புஷ்ப’வான் ப்ரஜாவா”ன் பஶுமான் ப’வதி | 
சந்த்ரமாவா அபாம் புஷ்பம்” | புஷ்ப’வான் ப்ரஜாவா”ன் பஶுமான் ப’வதி ய ஏவம் வேத’ | யோ‌உபாமாயத’னம் வேத’ | ஆயதன’வான் பவதி |
(MUSIC)
துணையாகத்-தோளைக் கொடுப்பார் இனி-முதியோரின் சுமையைக் குறைப்பார்
கனி-போலப் பேசி-மகிழ்வாய் அவர் கைகோர்த்துப்-பணியைப் புரிவார்
எனப்-பாட நீயும் வாராயோ நல்வாழ்த்துப் பாட்டில் கூறாயோ
எனப்-பாட நீயும் வாராயோ நல்வாழ்த்துப் பாட்டில் கூறாயோ
வாராய் என்-தோழி வாராயோ நல் வாழ்த்து பாட வாராயோ 
(மந்த்ரம்-3)
(3:30 to 2:46à16 Seconds)

நம’ஸ்தே அஸ்து பகவன்-விஶ்வேஶ்வராய’ மஹாதேவாய’ த்ரயம்பகாய’ த்ரிபுராந்தகாய’ த்ரிகாக்னிகாலாய’ காலாக்னிருத்ராய’ நீலகண்டாய’ 
ம்ருத்யும்ஜயாய’ ஸர்வேஶ்வ’ராய’ ஸதாஶிவாய’ ஶ்ரீமன்-மஹாதேவாய நமஃ’ ||
(MUSIC)
இவர்-வேகம் அடலின்-ஏறு அதில் பொடியாகும் தடைகள்-நூறு
இவர்-பாசம் பெருகும்-ஆறு அதில் கரைந்தோடும் பகையின்-ஊறு
எனப்-பாட நீயும் வாராயோ நல்வாழ்த்துப் பாட்டில் கூறாயோ
எனப்-பாட நீயும் வாராயோ நல்வாழ்த்துப் பாட்டில் கூறாயோ
வாராய் என்-தோழி வாராயோ நல் வாழ்த்து பாட வாராயோ
பொதுச்சேவை தன்னை இனிதே-பூணும் இளையோரைப்-பாட வாராயோ
வாராய் என்-தோழி வாராயோ நல் வாழ்த்து பாட வாராயோ
(MUSIC)
(மந்த்ரம்-4)
(5:05 to 5:30à35 Seconds)

ஓம் ராஜாதிராஜாய’ ப்ரஸஹ்ய ஸாஹினே” |
நமோ’ வயம் வை”ஶ்ரவணாய’ குர்மஹே | 
ஸ மே காமான் காம காமா’ய மஹ்யம்” | 
காமேஶ்வரோ வை”ஶ்ரவணோ த’தாது | 
குபேராய’ வைஶ்ரவணாய’ | மஹாராஜாய நமஃ’ |Tuesday, August 15, 2017

101. அன்பினால் வந்த-சங்கமே(மாசிலா உண்மை காதலே)அன்பினால் வந்த-சங்கமே அஞ்சுமோ-வம்பு சண்டை-கண்டுமே
(2)
பழகிப்-பாரு பாசம்-தெரிந்திடும் மோதி-நீ பாரு அதன்
வீரம்-புரிந்திடும்
(2)
என்றுமே இன்று-போலவே பாடுவோம் நாம் சங்கம்-தன்னிலே
(MUSIC)
நெஞ்சிலே ஒன்று-சேர்ந்து வாழும்-நம்மிலே
இருக்குமா அந்த-பேதம் எந்த-நாளுமே
(1+Short Music+1)
பாடும்-பாட்டில் சுருதி-மாறலாம் நெஞ்சிலே ஒருமை-ராகச் சுருதி-மாறுமோ
அன்பினால் வந்த-சங்கமே அஞ்சுமோ-வம்பு சண்டை-கண்டுமே
என்றுமே இன்று-போலவே பாடுவோம் நாம் சங்கம்-தன்னிலே
 (MUSIC)
ஒருமை-ராகமே என்றும் இங்கு-பாடவே
அதற்கு-ஏற்றதாய்த் தோன்றும் அன்பு-தாளமே
(1+Short Music+1)
அன்பின்-மேலே நன்று உள்ளதோ
அன்புதான் இறைவன்-என்று ஒன்றி-வாழுவோம்
(2)
அன்பினால் வந்த-சங்கமே அஞ்சுமோ-வம்பு சண்டை-கண்டுமே
(2)
(BOTH)Thursday, August 10, 2017

99. அண்ணே வா-இங்கே(கண்ணை நம்பாதே ) **
அண்ணே வா-இங்கே தம்பி வா-இங்கே
சும்மா வா-இங்கே நீ-கேட்கப் போகும் பாடல்-பொன்னானது
அம்மா நீ-கேளு ஐயா-நீ-கேளு- அழகான-பாட்டு
சங்கம் மேலானது
(Short Music)
அண்ணே வா-இங்கே
சும்மா வா-இங்கே நீ-கேட்கப் போகும் பாடல்-பொன்னானது
அம்மா நீ-கேளு ஐயா-நீ-கேளு- அழகான-பாட்டு
சங்கம் மேலானது
 (MUSIC)

ஆளுக்கொரு வேலை-செஞ்சார் சங்கத்துலே சேவை-செஞ்சார்
கண்முன்னே நடக்குமதைப் பாக்கறமே
(Short Music)
ஆளுக்கொரு வேலை-செஞ்சார் சங்கத்துலே சேவை-செஞ்சார்
கண்முன்னே தினமுமதை பாக்கறமே
 பார்த்து-பார்த்து நண்பருக்கு ஒத்தாசை செய்திடுவார்
ஒண்ணுக்குள் ஒண்ணாக நித்தியமே

போதும் நின்னுக்கிட்டே கேட்டதுவும் போதும்
நீயும் எம்மோடு ஒண்ணாக-வேணும்
(Pause)
போதும் நின்னுக்கிட்டே கேட்டதுவும் போதும்
வந்தே எம்மோடு பண்… பாட வேணும்
அண்ணே வா-இங்கே
சும்மா வா-இங்கே நீ-கேட்கப் போகும் பாடல்-பொன்னானது
சங்கம் மேலானது
(MUSIC)

 ஓருயிராய்-சங்கத்துலே ஒத்துமையாய்-ஒண்ணுக்குள்ளே
எந்நாளும் அங்கத்தினர் வாழுறாங்க
சீமான்கள்-யாருமில்லே சாமான்யர்-என்றுமில்லே
எல்லோரும் சங்கத்துலே ஒண்ணுதாங்க
யாரும் உதவிக்..கு வாடுவதுமில்லை
பாழும் பதவிக்..கு ஓடுவதுமில்லை
அண்ணே வா-இங்கே
(MUSIC)

உன்னுறவு வீடுவரை உன்-மனைவி வீதிவரை உன்-பிள்ளை கொள்ளியிடக் காடுவரை
(1+SM+1)
நல்-தோழர் உடனிருப்பார் உன்-பிறகும் உடனிருப்பார்
மெதுவாக உன்-குடும்பம் தேறும்-வரை
ஒன்றி இதுபோல வாழுதலே யோகம்
என்றும் இதுபோலப் பாடுதலே யாகம்
அண்ணே வா-இங்கே தம்பி வா-இங்கே
சும்மா வா-இங்கே நீ-கேட்கப் போகும் பாடல்-பொன்னானது
அம்மா நீ-கேளு ஐயா-நீ-கேளு- அழகான-பாட்டு
 சங்கம் மேலானது
 

முதல் பக்கம்


Wednesday, August 9, 2017

100. தேரோடும் எங்கள் சங்கத் தேரோடும்(ஆறோடும் மண்ணில்)தேரோடும் எங்கள்-சங்கத் தேரோடும்
ஊர்பாடும் வண்ணம் சங்கத் தேரோடும்
(2)
போராடும் பேச்சே-இல்லை யாரோடும் பேதம் இல்லை
பாராட்டுப் பேர் ஒன்று தான்
(MUSIC)
தேரோடும் எங்கள்-சங்கத் தேரோடும்
ஊர்பாடும் வண்ணம் சங்கத் தேரோடும்

(MUSIC)
மண்ணிலே ஊனைத்-தந்து உயிரும்-தந்து ஊணும்-தந்து
தன்னிலே தானே-செய்யும் திறமை தன்னை அழகாய்த்தந்து
நெஞ்சிலே ஈரம் என்னும் வடிவில்-தானும் உள்ளிருந்து
கொஞ்சமும் தன்னை வெளியில் காட்டாத எளிமை-கொண்டு
சேராயோ ஒன்றாய்க்-கூடி வாழாயோ
என்றானே இறைவன் நம்மைத் தேறாயோ
தேரோடும் எங்கள்-சங்கத் தேரோடும்
ஊர்பாடும் வண்ணம் சங்கத் தேரோடும்
(MUSIC)

பந்தம்-என்ற ஒன்றில்-கட்டி நம்மை-விட்டதேனம்மா (2)
உலகம்-என்ற மேடைமேலே நானும்-நீயும் ஏனம்மா
நானும்-நீயும் ஏனம்மா 
அண்ணன்-தங்கை போல-நாமும் வாழவேண்டும் ஆமம்மா
இறைவனின் பாசம்-என்னும் திருவுளம்-தானம்மா
திருவுளம் தானம்மா
போராடும் பேச்சே-இல்லை யாரோடும் பேதம் இல்லை
பாராட்டுப் பேர் ஒன்று தான்
தேரோடும் எங்கள்-சங்கத் தேரோடும்
ஊர்பாடும் வண்ணம் சங்கத் தேரோடும்
(MUSIC)
பொய்விட்டு பேதம் விட்டு அன்பைக் கொண்ட உள்ளம்-கொண்டு
உள்ளோரின் நட்பைப்-பெற்றால் சொர்க்கம்-பூமி தானே அம்மா
பார்-தன்னில் தங்கம்-என்று பேர்-பெற்ற சங்கம்-பாரு (2)
ஊரெல்லாம் சேர்ந்தே-கூடி இழுக்கின்ற சங்கத்-தேரு
அழகான சங்கத்தேரு

போராடும் பேச்சே-இல்லை யாரோடும் பேதம் இல்லை
பாராட்டுப் பேர் ஒன்று தான் .. ஆ


தேரோடும் எங்கள்-சங்கத் தேரோடும்
ஊர்பாடும் எங்கள் சங்கத் தேரோடும்
போராடும் பேச்சே-இல்லை யாரோடும் பேதம் இல்லை
பாராட்டுப் பேர் ஒன்று தான்
(ALL)

Monday, August 7, 2017

98. எண்ணம் ஒன்றாய்(கண்ணன் வந்தான்) **


விருத்தம்
சொல்லினால் முடிவதில்லை கூட்டுறவின்-சிறப்பு
வீட்டுறவும் நாட்டுறவும் கூட்டுறவின் மீது
தனிமரம்  தோப்பாமோ யார்க்கும் பிரிவாமோ
உரைப்பாயே ஒற்றுமைக்கு மேலாய் ஒன்றை

________________________
(MUSIC)
எண்ணம்-ஒன்றாய் எண்ணும் எண்ணம்-ஒன்றாய்
கொண்டு வாழ்வோரைக் கொண்டதே சங்கம்-நண்பா
(2)
சங்கம்-நண்பா ..
(MUSIC)

பேசுகின்ற பேச்சினிலே சொல்லும்-ஒன்றாய்
செய்வதொன்று நன்று-என்று  செய்கை-நன்றாய்
(2)
ஒற்றுமைக்கு ஏற்றபடி எதுவும்-ஒன்றாய்
கேள்விகளே இல்லாமல் எதுவும்-நன்றாய்
தர்மம்-சொன்ன வழியில்-மேவி என்றும்-பண்பாய்
மேலாகப் பணியாற்றும் சங்கம் ஒன்றாம்
சங்கம்-ஒன்றாம் எங்கள் சங்கம்-நன்றாம் சங்கம்-நன்றாம்
எண்ணம்-ஒன்றாய் எண்ணும் எண்ணம்-ஒன்றாய்
கொண்டு வாழ்வோரைக் கொண்டதே சங்கம்-நண்பா
சங்கம்-நண்பா ..
(MUSIC)

இடரதனைத் தீர்த்துவைக்க ஒன்றாய்-மனம்
கூடி-எதுவும் பார்த்து-பார்த்து செய்யும் இடம்
(2)
உதவிகளை சேவையென்று நன்றே-பெரும் 
சேவைதனைப் பூஜை-என்று ஒன்றாய்-மனம்  
(2)
சளையாமல் தினமுழைக்கும் சங்கமாகும்
மங்காமல் மின்னிவரும் தங்கமாகும்
தங்கமாகும் சொக்கத்-தங்கமாகும் சங்கமாகும்
எண்ணம்-ஒன்றாய் எண்ணும் எண்ணம்-ஒன்றாய்
கொண்டு வாழ்வோரைக் கொண்டதே சங்கம்-நண்பா

சங்கம்-நண்பா ..
நண்பா ..ஆ  நண்பா நண்பா
(Short Music)
ஒருமை-மின்னும் வாழ்க்கை-வாழ்ந்து காட்டும்-சங்கம்
மோதல் என்னும் பேய்-ஒட்டிப் போக்
கும்-சங்கம்
(2)
இன-ஒருமை பெருமை-தன்னைப் பாடும்-சங்கம்
என்றும்-நின்று வாழும் நிலையான சங்கம்
(2)
தீமையில்லை அதனிடத்தில் என்றும்-நண்பா
தயக்கமேன் அதில்-சேர வருவாய் நண்பா
(2)
நண்பா ..
வா-வா  .. வா-வா  நண்பா

எண்ணம்-ஒன்றாய் எண்ணும் எண்ணம்-ஒன்றாய்
கொண்டு வாழ்வோரைக் கொண்டதே சங்கம்-நண்பா
சங்கம்-நன்றாம்  .. சங்கம்-நன்றாம்

(ALL)

Sunday, August 6, 2017

97. வேற்றுமைகள் ஏதேதோ(நேற்று வரை நீ யாரோ) **

வேற்றுமைகள் ஏதேதோ இங்கேதோ
ஒற்றுமையில் தீதேதோ ஏதேதோ
வாழும்வகை ஈதொன்றே வேறன்றே
சங்கமதில் தீதெங்கே யாதிங்கே
வேற்றுமைகள் ஏதேதோ இங்கேதோ
ஒற்றுமையில் தீதேதோ ஏதேதோ
(MUSIC)
 
தன்னலம் சேர்க்கும்-கோது தன்னையே தாக்கும்-நோயே (2)
பிறர்நலம் நோக்கும்-போது உன்னை-நீ உணர்கின்றாயே (2)
*ஏதிலார் துன்பம்-போக்க தன் துன்பம் தானே-போகும்
பிறரிடர் தனதாய்-நோக்கத் தன்னிடர் இடராப்-போகும்
வேற்றுமைகள் ஏதேதோ இங்கேதோ
ஒற்றுமையில் தீதேதோ ஏதேதோ
(MUSIC)
மானிடர் ஒருமை-கொண்டே வாழ்தலின் எதுவோ-நன்றே (2)
சேவை-தான் பூஜை-என்றே சொல்லுதே கீதை-நன்கே (2)
செய்வதை நன்றாய் இன்று செய்யுவோம் ஒன்றாய் நின்று
இன்று-போல் என்றும்-வந்து பாடுவோம் அன்பாய்ச்-சிந்து
வேற்றுமைகள் ஏதேதோ இங்கேதோ
ஒற்றுமையில் தீதேதோ ஏதேதோ

* ஏதிலார் துன்பம்-தன் துன்பம்-போல் காண்கிற்பின்
  தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு
96. விழுமிய ஒருமையில் திகழ்(அழகிய தமிழ்மகள் இவள்)


விருத்தம்
கோடிப்-பொன் தந்தாலும் தேடித்தான் சென்றாலும்
சொல்வாய்  நண்பா எங்கே

ஹோ ..
ஒற்றுமையே உயர்வாகும் அதில்-இதமாய் உருவாகும் அன்பைக் கொள்வாய் இங்கே  

ஹோ ..
-------------------------
விழுமிய ஒருமையில் திகழ்
பெரும் உயர்வதன் பெருமையின் புகழ்
தன்னை மொழிவது சங்கத்தின் குரல்
கேட்டால் இனிக்கும் பாட்டாய் ஒலிக்கும்
(Very Short Music)
விழுமிய ஒருமையில் திகழ்
பெரும் உயர்வதன் பெருமையின் புகழ்
தன்னை மொழிவது சங்கத்தின் குரல்
கேட்டால் இனிக்கும் பாட்டாய் ஒலிக்கும்

(MUSIC)

வானவர்கள் இன்னும் இன்னும்-என உண்ணும்
தேனமுதை மிஞ்சும் ஒற்றுமையின் நெஞ்சம்
(2)
பேசும்-மொழி கன்னல் என்று-விழும் காதில்
என்றுமிலை-மோதல் ஒற்றுமையின் வாழ்வில்

(2)
ஒருமையில் இணைந்திடும் கரம்
உடன்-பெறவது மலையினும் உரம்
அந்த நிலை-பெறல் நமக்கொரு வரம்
இணையும் மனத்தால் பலன்-தான் எவர்க்கும்

விழுமிய ஒருமையில் திகழ்
பெரும் உயர்வதன் பெருமையின் புகழ்
தன்னை மொழிவது சங்கத்தின் குரல்
கேட்டால் இனிக்கும் பாட்டாய் ஒலிக்கும்
(MUSIC)

ஜாதி மதம் குலம் எனும்
போதை தரும் கொடும் விஷம்
(2)
தொல்லை தான் இங்கு இல்லை தான்

மோதல் இலா இடம்-இடம்
அன்பே உலா வரும்-வரும்
(2)
சங்கம்-தான் எங்கள் சங்கம்-தான்
அடிதடி வம்பெனும் பழி 
அந்த பழியினில் வரும்-ஒரு வழி
அந்த வழி-தரும் கொடுமையின் மொழி
விலக்கும் தடுக்கும் இடம்-தான் சங்கம்

விழுமிய ஒருமையில் திகழ்
பெரும் உயர்வதன் பெருமையின் புகழ்
தன்னை மொழிவது சங்கத்தின் குரல்
கேட்டால் இனிக்கும் பாட்டாய் ஒலிக்கும்
(MUSIC)

பாடல் தனைப் படிக்கையில்
சேர்ந்தே அதைப் படிக்கையில்
இன்பம்-தான் என்றும் இன்பம்-தான்
பாடல்..களும் இதோ-இதோ சொல்லும் மொழி எதோ எதோ  (2)
ஒன்றே தான் .. எங்கள்
(PAUSE)

ஒன்றே தான் எங்கள் அன்பே தான்
பதவியின் மீதொரு விழி
அதை அடைந்திட செய்திடும் சதி
தனை முறித்திடும் சங்கத்தின் விதி
எனத்தான் உரைப்பேன் தமிழ்ப்பா படிப்பேன் 
விழுமிய ஒருமையில் திகழ்
பெரும் உயர்வதன் பெருமையின் புகழ்
தன்னை மொழிவது சங்கத்தின் குரல்
கேட்டால் இனிக்கும் பாட்டாய் ஒலிக்கும்