Monday, September 21, 2015

55. நன்றாய் வளைந்திடலே (அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்) **

( அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் )
 
நன்றாய் வளைந்திடலே ஒளி-தரலே தங்கத்தின்-சிறப்பு
அன்பாய் இணைந்திடலில் வரும்-உறவே சங்கத்தின்-சிறப்பு

(1+sm+1)
தங்கச் சிறப்பை உரசிப்பார்த்து அளவிடல் போலே
    சற்றும் உரசிடாமல் ஒளிர்ந்து நிற்பார் தங்கத்தின் மேலே

(2)
அன்பாய் இணைந்திடலில் வரும்-உறவே சங்கத்தின்-சிறப்பு சங்கத்தின்-சிறப்பு
(MUSIC)

   பயிர்-வளரத் தேவை-அந்த நீரைப் போலே
சங்கம் உயிர்-எனவே சுரந்து-வரும் அன்பு தானே

(2)
ஒருமை-இன்றிப் பார்க்கையில் பெருமை-என்ன வாழ்க்கையில்
ஆதி-தொட்டு இன்று-மட்டும் பெருமை நெஞ்சச் சேர்க்கையில்
சங்கம் என்ற சேர்க்கையே
நன்றாய் வளைந்திடலே ஒளி-தரலே தங்கத்தின்-சிறப்பு
அன்பாய் இணைந்திடலில் வரும்-உறவே சங்கத்தின்-சிறப்பு
(MUSIC)

நாமிப்போது சேர்வதனால் உயர்ந்திடாதம்மா
நாம் விலகி-நின்றால் அதன்-பெருமை குறைந்திடாதம்மா

(2)
நமக்குத்தானே பெருமைகள்
சங்கம்-தன்னில் சேர்வதால்
உண்மை இதனை உணர்ந்திடாமல் தலை-கனத்துத் திரிவதா
தனிமை என்ன பெரியதா   

அன்பாய் இணைந்திடலில் வரும்-உறவே சங்கத்தின்-சிறப்பு சங்கத்தின்-சிறப்பு
(MUSIC)

தோட்டம் போன்ற சங்கப் பயிரை வாட-விடுவதோ
பல கேள்வி-மட்டும் கேட்டுப்-பின்னர் ஒதுங்கி-நிற்பதோ

(2)
நான்-உடனே இணைகிறேன் என்று-சொல்லி வாங்களேன்
பூனை-கண்ணை மூட-பூமி இருண்டிடாது உணருங்களேன்
சங்கம்-வந்து சேருங்களேன்
 நன்றாய் வளைந்திடலே ஒளி-தரலே தங்கத்தின்-சிறப்பு
அன்பாய் இணைந்திடலில் வரும்-உறவே சங்கத்தின்-சிறப்பு
தங்கச் சிறப்பை உரசிப்பார்த்து அளவிடல் போலே
சற்றும் உரசிடாமல் ஒளிர்ந்து நிற்பார் தங்கத்தின் மேலே
அன்பாய் இணைந்திடலில் வரும்-உறவே சங்கத்தின்-சிறப்பு
 
No comments:

Post a Comment