Monday, January 4, 2016

56. கனியினும் இனித்த ( மதுரையில் பறந்த மீன் கொடியை ) ****

Click here to listen to the Original Song

(Aligned to KARAOKE)

கனியினும்-இனித்த தேன்-மொழியே இவர் பேசிடல்-கேட்டேனே
யாரும் பகையில்லை-சிறந்த நண்பர்கள்-என்றே குலவிடல்-கண்டேனே
(1+SM+1)

(MUSIC)
தங்கிடச்-சிறந்த இடமெனவே-என் தந்தையும்-கொண்டாரே
தரணியில்-சிறந்த இடமெனவே-என் தந்தையும் கொண்டாரே
இது இருபத்து-ஐந்து ஆண்டின்-பின்னும் நிஜமெனக்-கண்டேனே
என்றும் நிஜமிது காண்பீரே
கனியினும்-இனித்த தேன்-மொழியே இவர் பேசிடல்-கேட்டேனே
யாரும் பகையில்லை-சிறந்த நண்பர்கள்-என்றே குலவிடல்-கண்டேனே
 (MUSIC)
ஓய்ந்து-கிடந்தால் தாங்கிப்-பிடிக்கும் சங்கமிதைபோல் எங்குமுண்டோ
குணத்தினில்-சேயோ எனும்-இவர்-இடையோர் வேற்றுமை என்னும் நோய்-உளதோ

சேலத்தில்-விளையும் இரும்பினும் திடம்-தான் என்பது-போல் இவர் ஒற்றுமையோ
வாழ-உலகில் பெய்யும்-மழைபோல் பொழிவது தான்-இவர் தன் குழைவோ
பொழிவது தான் இவர் தன்-குழைவோ
கனியினும் இனித்த தேன் மொழியே இவர் பேசிடல் கேட்டேனே
யாரும் பகையில்லை-சிறந்த நண்பர்கள்-என்றே குலவிடல் கண்டேனே
(MUSIC)

எதுகை-மோனை நிறைந்திடும் கவிபோல் சிறப்பது-தான் இவர் செயல்பாடோ

(2)
அனுதினம்-ஓதும் ஒருமையின்-வேதம் என்பதுவே இவர் வழிபாடோ
இவை-யாவும் ஒன்றாய் சேர்ந்தது-எங்கள் நலச்சங்கம் காண்பீரே
கனியினும் இனித்த தேன் மொழியே இவர் பேசிடல் கேட்டேனே
யாரும் பகையில்லை-சிறந்த நண்பர்கள்-என்றே குலவிடல் கண்டேனே

No comments:

Post a Comment