Monday, July 27, 2015

4. ஒன்றாகிக் கொண்டாடுவோம்(எல்லோரும் கொண்டாடுவோம்) **

( எல்லோரும் கொண்டாடுவோம் )

ஒன்றாகிக் கொண்டாடுவோம் (2)
முன்னோர்கள் சேவை-தன்னை எந்நாளும் மனதில்-எண்ணி
முன்னோர்கள் சேவை-தன்னை எந்நாளும் மனதில்-எண்ணி
 ஒன்றாகிக் கொண்டாடுவோம்
ஒன்றாகிக் கொண்டாடுவோம்
(MUSIC)

கல்லான மனசக்-கொண்டு சங்கத்திலே யாருமில்லே
கல்லான மனசக்-கொண்டு
சங்கத்திலே யாருமில்லே
 பொன்னான மனசிருக்க எங்களுக்கு ஏது-தொல்லே
 பொன்னான மனசிருக்க எங்களுக்கு ஏது-தொல்லே
நேற்றினைக் காத்திடுவோம் நாளையைப் பார்த்திடுவோம்
 நேற்றினைக் காத்திடுவோம் நாளையைப் பார்த்திடுவோம்
இன்று-நாம் ஒன்றாய்க் கூடி நன்றாய் ஆடுவோம்
ஒன்றாகிக் கொண்டாடுவோம்
ஒன்றாகிக் கொண்டாடுவோம்
(MUSIC)
(விருத்தம்)
நூறு வகை உறவுகளும் நாடி-நமைத் தேடிவரும்
சங்கம்-என நாம்-இருக்கும் கூட்டுறவின் மேன்மையினால்..

ஓ….ஓ.. 
(Very Short Music)

 வெறுப்பில்லே மறுப்புமில்லே நமக்குள்ளே பிரிவுமில்லே
வெறுப்பில்லே மறுப்புமில்லே
நமக்குள்ளே பிரிவுமில்லே
உறவுக்குள் சரிவுமில்லை மனதுக்குள் பேதமில்லை
உறவுக்குள் சரிவுமில்லை மனதுக்குள் பேதமில்லை
முதலென நம்மை வைத்தோம் முடிவென நன்மை கொய்தோம்
 முதலென நம்மை வைத்தோம் முடிவென நன்மை கொய்தோம்
ஒன்றிலே நம்மைக்-கண்டு ஒன்றாய் ஆடுவோம்
ஒன்றாகிக் கொண்டாடுவோம்
ஒன்றாகிக் கொண்டாடுவோம்
(MUSIC)
(விருத்தம்)
பாசம்கொண்டு அந்நாளில் சங்கம்-உருச் செய்தாரே
 மோசம்-சிறிதுமிலா-அவர் நேசம்தனைப் போல்வருமா

 (SM)
 அன்றவர் கொடுத்துச் சென்றார் நன்கிவர் நடத்துகின்றார்
 அன்றவர் கொடுத்துச் சென்றார் நன்கிவர் நடத்துகின்றார்
உயர்வழி  கொடுத்துச் சென்றார் அதன்படி  நடந்து சென்றார்
உயர்வழி  கொடுத்துச் சென்றார் அதன்படி  நடந்து சென்றார்
சிறந்தது நமதுசங்கம் பொதுநலம் அதனின் அங்கம்
சிறந்தது நமதுசங்கம் பொதுநலம் அதனின் அங்கம்
  இன்று-நாம் ஒன்றாய்க் கூடி நன்றாய் ஆடுவோம்
ஒன்றாகிக் கொண்டாடுவோம்
ஒன்றாகிக் கொண்டாடுவோம்
முன்னோர்கள் சேவை-தன்னை எந்நாளும் மனதில்-எண்ணி
முன்னோர்கள் சேவை-தன்னை எந்நாளும் மனதில்-எண்ணி
 ஒன்றாகிக் கொண்டாடுவோம் (2)
ஒன்றாகிக் கொண்டாடுவோம்

No comments:

Post a Comment