Tuesday, August 4, 2015

10. கேளாயோ தம்பி கேளாயோ (தூங்காதே தம்பி தூங்காதே) **

 

( Aligned to KARAOKE )

கேளாயோ தம்பி கேளாயோ (2) ..நான்

 சொல்வேனே சங்கக்-கதை கேளாயோ
கேளாயோ தம்பி கேளாயோ
 (2)
 (SM)


நீ வாழ்ந்திடும் நகரின் சிறப்பினையும்
       பல நிகழ்வுகள் கொண்ட அதன் பிறப்பினையும்
(2)
தெரிந்து இருந்தால் உனக்கொரு பொறுப்பும் (2)
சத்தியமாய் உனக்கு விரைந்து வரும்

கேளாயோ தம்பி கேளாயோ சொல்வேனே சங்கக்-கதை கேளாயோ
கேளாயோ தம்பி கேளாயோ
(MUSIC)
நல்லதைச் செய்திடலாம் என்று-நினைத்து-அன்று நல்லவர் சேர்ந்து-இந்த சங்கம்-அமைத்தார்
(2)
அட எனக்கென்ன என்று-அவர் சும்மா-இருந்திருந்தால்
நகரம் இல்லை-இன்று நமக்கு-அப்பா
 எனக்கென்ன என்று-அவர் சும்மா-இருந்திருந்தால்
நகரம் இல்லை-இன்று நமக்கு-அப்பா
உழைப்பு தந்தார் நன்றாய் செழிப்பு தந்தார்.. ஆ..ஆ..
உழைப்பு தந்தார் நன்றாய் செழிப்பு தந்தார்
பின்னால் நகரில் வந்தோரெல்லாம் சிறக்கச் செய்தார்
கேளாயோ தம்பி கேளாயோ சொல்வேனே சங்கக்-கதை கேளாயோ
கேளாயோ தம்பி கேளாயோ
(MUSIC)

  ஓர் படை-என வந்து-சிலர் நகரை அடைந்தார் (2)
பலர் உள்..ளம்-வ..ருந்திட-நீர் தன்னை-எடுத்தார்
சங்கம் கொண்ட அங்கத்தினர் ஒன்று இணைந்தார்
கொண்ட அவர்-கொடும் எண்ணம்-தனை முறியடித்தார்
இன்னும் பலப்பல ப்ரச்சனைகள் ஒற்றுமையால் சங்கம்
நன்றாக எதிர்கொண்டு காத்ததப்பா

கேளாயோ தம்பி கேளாயோ சொல்வேனே சங்கக்-கதை கேளாயோ
கேளாயோ தம்பி கேளாயோ.. தம்பி கேளாயோ

கேளாயோ தம்பி கேளாயோ தம்பி கேளாயோ



No comments:

Post a Comment