Tuesday, August 4, 2015

12. முன்னோர் நகரில் (புத்தன் ஏசு காந்தி பிறந்தது) **

 


( புத்தன் ஏசு காந்தி பிறந்தது )

முன்னோர் நகரில் சங்கம்-அமைத்தது உண்மையில் எதற்காக
தோழா பிறர்-நலம் தனைக்காக்க

(1+sm+1)

பின்னால் பலரதைக் காக்கணும்-என்று உழைப்பது எதற்காக
நாளும் உழைத்து முன்னோர் புரிந்த த்யாகம்-ஒன்..றினுக்காக

கேள்விகள்-எழினும் அவரின்-அமைதிப் பொறுமையும்-எதற்காக
வேள்வியைப்-போலே முன்னோர்-செய்த சேவை-ஒன்..றினுக்காக


முன்னோர் நகரில் சங்கம்-அமைத்தது உண்மையில் எதற்காக
தோழா பிறர்-நலம் தனைக்காக்க
(MUSIC)


குழல்-கொண்ட கண்ணன் அவன்-தந்த பாதை
பலன்-விட்ட சேவை எனும்-நல்ல கீதை

(2)
அதைப் போன்ற வாழ்க்கை தனைக்-கொள்ளு..வாயே
அஹங்கார போதை நீ-தள்ளுவாயே
சேவை-என்பது அடக்கம்-கொள்வது என்று உணர்..வாயே
சங்கம்-என்பது எல்லோர்க்கும்-பொது என்பதை அறிவாயே

முன்னோர் நகரில் சங்கம்-அமைத்தது உண்மையில் எதற்காக
தோழா பிறர்-நலம் தனைக்காக்க
(MUSIC)

பொருள்-வேண்டிச் சங்கம் தனில்-யாரும் இல்லை
பெயர் வேண்டி-இங்கே தவிப்பாரும் இல்லை

(2)
அவர் கொண்ட-பா..சம் தனில்-வேஷம் இல்லை
கனம் கொண்டு-இங்கே இல்லை-இல்லை யாரும்
பதவியின் மோகமும் தனக்கெனும் வேகமும்
சங்கத்தில் இருக்கவில்லை
ஐந்தைந்தாண்டிலும் இருக்குமிச்சங்கமும் ஒருவரை-நம்பி இல்லை

முன்னோர் நகரில் சங்கம்-அமைத்தது உண்மையில் எதற்காக
 தோழா பிறர்-நலம் தனைக்காக்க


No comments:

Post a Comment