Sunday, August 16, 2015

14. சங்கத்தின் கதை போலே(சந்திரப் பிறை பார்த்தேன்) **






( சந்திரப் பிறை பார்த்தேன் )



சங்கத்தின் கதை-போலே தோழி வேறெங்கு நிகழ்ந்ததடி (2)
பாரினில் வேறிது-போல் எதுவோ என-இது திகழுதடி (2)
சங்கத்தின் கதை-போலே தோழி வேறெங்கு நிகழ்ந்ததடி
(MUSIC)

 நகரத்து-வீதிகள் தன்னை-இணைத்து வேதனை-தீர்த்ததடி
ஒற்றுமையாலது நகர்-நலன் நினைத்துச் சாதனை-படைத்ததடி

(2)
சாதனை படைத்ததடி.. சாதனை படைத்ததடி
இதுவரை பட்ட பாடுகள்-எல்லாம் முடிவுக்கு வந்ததடி
பொதுநலச்-சங்கத்தின் சேவைகள்-அன்பால் தொடர்ந்து-ந..டந்ததடி

சங்கத்தின் கதை-போலே தோழி வேறெங்கு நிகழ்ந்ததடி
( MUSIC)..
வாழி சங்க நலன் வாழி (2) வாழியவே (4)..
( Short Music)

கேணியின் நீரை எடுத்திடவே-ஓர் கூட்டமும் வந்ததடி
சங்கத்தின்-ஒற்றுமை கண்டது-உடனே எடுத்தது ஓட்டமடி
(2)
வேண்டிடத் தேவை இல்லை-எனவே உதவி-கி..டைத்ததடி
விற்றிட-மனையும் இல்லை-எனவே நகரும்-வளர்ந்..ததடி

சங்கத்தின் கதை-போலே தோழி வேறெங்கு நிகழ்ந்ததடி
(MUSIC)


எல்லாம்-நானே என்கிற-பேர்கள் சங்கத்தில் இல்லையடி
குடுமியைப் பிடித்துப்  போரிடும்-சிறுமை எவருக்கும் இல்லையடி
எவருக்கும் இல்லையடி சங்கத்தில் இல்லையடி
இந்தா-இந்தா என்றே-எதையும் விட்டுக்-கொடுக்கும்படி
ஆண்டவன்-அருளால் மாபெரும்-பண்பே இங்கு இருக்..குதடி

சங்கத்தின் கதை-போலே தோழி வேறெங்கு நிகழ்ந்ததடி
பாரினில் வேறிது-போல் எதுவோ என-இது திகழுதடி
வேறெது நீ சொல்லடி..வேறெது நீ சொல்லடி..வேறெது நீ சொல்லடி



முதல் பக்கம்

No comments:

Post a Comment