Tuesday, August 18, 2015

27. ஒற்று..மையைப் போல் (எண்ணப் பறவை சிறகடித்து) **

( எண்ணப் பறவை சிறகடித்து )

ஒற்று..மையைப் போல் மேன்மை-தர வேறே இருக்கின்றதா
நல் இனிமை-பெற சங்கத்தை விட மேலே இருக்கின்றதா

(1+SM+1)
(MUSIC)

நாளும் வாழ்க்கைப் போராட்டத்தில் அலுப்பே பிறக்குதய்யா (2)
அதனைக் குறைத்திடும் வகையில் இதம்-தரத் தானே சங்கம் –நடக்குதய்யா (2)

(SM)
ஆறுகள் நூறாய்ப் பிரிந்திருந்தாலும் சேர்ந்திடும் கடல் ஒன்றய்யா
சங்கம் அதுபோல் உள்ளங்கள் சேரும் இடம்-என அறிந்திடய்யா

ஒற்று..மையைப் போல் மேன்மை-தர வேறே இருக்கின்றதா
நல் இனிமை-பெற சங்கத்தை விட மேலே  இருக்கின்றதா
(MUSIC)

ஊடலைப் போலே சிலரிடம்-போட்டிப் புகைச்சல் இருக்குமய்யா
கொண்ட உரிமையினாலே குடும்பத்தைப் போலே அன்பில் பிறக்குமைய்யா 
(SM)
நீரினில் தோன்றும் குமிழியைபோலே கணத்தில் மறையுமய்யா
பே..ரமைதி எனும் எழில்-கொஞ்சும் இடமே சங்கமய்யா

ஒற்று..மையைப் போல் மேன்மை-தர வேறே இருக்கின்றதா
நல் இனிமை-பெற சங்கத்தை விட மேலே இருக்கின்றதா

No comments:

Post a Comment