வாழ்த்துப் பா
வாழி-வாழி சிட்லபாக்கம் முத்துலக்ஷ்மி நகரம்-வாழி
வாழி-அதனில் வாழும்-மக்கள் அமைதிபூண்டு இனிது-வாழி
வாழி-நல்ல மனம்-உடை-முன்..னோர்கள்-செய்த சங்கம்-வாழி
வாழி-அன்று சங்கம்-தன்னைப் படைத்த-மாந்தர் புகழும்-வாழி
வாழி-வாழி அதனில்-சேவை செய்யும்-மாந்தர் வாழி-வாழி
வாழி-வாழி நமது-இனிய சங்கம்-தன்னி..லே-திகழ்
வாழையடி வாழையென்று வளரும்-ஒற்று..மைப்-புகழ்
தோழிகோடி நண்பர்கோடி என்று-ஆகி சங்கம்-நாடி
ஆழிபோல இருக்குதென்று நம்மைக்கண்டு உலகு-கூறி
வியக்குமாறு ஒன்றுகூடி இருக்குமாறு சங்கம் வாழி
ஒன்றுபட்டு வந்த-வாழ்வை உலகு-காண எடுத்துக்-காட்டி
தொன்றுதொட்டு வந்த-இந்த சங்க-மாண்பு தன்னைப்-பேணி
இன்றுபோல என்றுமன்பு பூண்டு-நெஞ்சில் உவகை-ஊட்டி
தங்கவிழா பவழ-விழா என்ற-சிறப்பு பலது கூடி
வாழி-வாழி நமது-சங்கம் இன்னும்-ஆண்டு கோடி-கோடி
-----------------------
No comments:
Post a Comment