Sunday, September 20, 2015

54. மூன்றெழுத்தின் (மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்) **

( மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் )

மூன்றெழுத்தின் உயர் மந்திரமே அது சங்கம் தனில்-வரும் மூச்செனவே
உள்ளம்-சேர்ந்திடல் ஓர்-அறமே பல-கரமொன்று இணைந்திட வரும் திறமே
ஒருமை அது ஒருமை (2)

அந்த

(MUSIC)

செருக்கு தரும்-வேகம்  கொண்டுஅலைவோர்க்கு மதிப்புகிடையாது தோழா
அந்த நோய்கொண்டு எங்கள்-சங்கத்தில் எவரும்-கிடையாது பாராய்

(1+sm+1)
பணிவே உயர்வென்றே இனிதே அதைக் கொண்டே
இருக்கார் பலர் இங்கே செய்வார் பொதுத்-தொண்டே

மூன்றெழுத்தின் உயர் மந்திரமே அது சங்கம் தனில்-வரும் மூச்செனவே
உள்ளம்-சேர்ந்திடல் ஓர்-அறமே பல-கரமொன்று இணைந்திட வரும் திறமே
ஒருமை அது ஒருமை (2)
(MUSIC
)
வாழையடி-வாழை என்று நம்-சங்கம் வாழப் பண்-பாடு தோழா
கோழை என்றெங்கள் பணிவை-எண்ணாதே அது-எம் பண்பாடு பாராய்

(1+sm+1)
பணிவே உயர்வென்றே இனிதே அதைக் கொண்டே
இருப்பவர் பலர்-இங்கே செய்வது பொதுத்-தொண்டே

மூன்றெழுத்தின் உயர் மந்திரமே அது சங்கம் தனில்-வரும் மூச்செனவே
உள்ளம்-சேர்ந்திடல் ஓர்-அறமே பல-கரமொன்று இணைந்திட வரும் திறமே
ஒருமை அது ஒருமை (2)

முதல் பக்கம்

No comments:

Post a Comment