Monday, January 4, 2016

57. பிரிந்தே இருந்து(புத்தன் ஏசு காந்தி பிறந்தது) **

பிரிந்தே இருந்து சிரிப்பே  மறந்து இருப்பது சரியாங்க என்றும் அதுதான்  உயர்வாங்க 
என்றே ஒருமை மேம்பட நினைத்து சங்கத்தை அமைத்தாங்க
நாளும்-உழைத்து த்யாகம்-புரிந்து சங்கத்தை-வளர்த்தாங்க
தோல்விகளுக்குத் துவண்டு-விடாமல் விழுந்ததும்-எழுந்தாங்க
ஞாயம் ஒன்றே வழியெனக் கொண்டு எதையும்  வென்றாங்க  

பிரிந்தே இருந்து சிரிப்பே  மறந்து இருப்பது சரியாங்க என்றும் அதுதான்  உயர்வாங்க
(MUSIC)
இடர் வந்த-போது அவர்-செய்யும் தொண்டு இயல்கின்றவாறு எந்நாளும் உண்டு
நகல் என்று-நூறு இருக்கின்ற-போது அசல் என்று-ஒன்று எந்நாளும்-உண்டு
உண்மையாம்-இது கண்டு-சொல்வது என்னிரு-விழியாகும்
நன்மை-செய்திடு நாளும்-என்பது சங்கத்தின்-வழியாகும்

பிரிந்தே இருந்து சிரிப்பே  மறந்து இருப்பது சரியாங்க என்றும் அதுதான்  உயர்வாங்க
(MUSIC)
பகை-எங்கள் சங்கம் தனில்-என்றும் இல்லை
புகை-கொண்ட உள்ளம் எதும்-இங்கு இல்லை
சினம்-என்ற நோயில் வருந்திட்ட-பேரும்
 சிரிப்பாரே-நன்றே வந்து-இங்கு பாரும்
நொந்தவர்-அழுவதும் நின்றதைக்-காண்பதும் சங்கத்தில் நடப்பதில்லை
சென்றவர்-துயரை துடைப்பது-ஒன்றே எங்களின் சங்கக்-கொள்கை

பிரிந்தே இருந்து சிரிப்பே  மறந்து இருப்பது சரியாங்க என்றும் அதுதான்  உயர்வாங்க
என்றே ஒருமை மேம்பட நினைத்து சங்கத்தை அமைத்தாங்க
நாளும் உழைத்து த்யாகம் புரிந்து சங்கத்தை வளர்த்தாங்க
தோல்விக்கு என்றும் துவண்டு விடாமல் விழுந்ததும் எழுந்தாங்க
யாரும் ஒன்றே வாவெனக் கூறி இணைத்தார் அன்பாக
 
பிரிந்தே இருந்து சிரிப்பே  மறந்து இருப்பது சரியாங்க என்றும் அதுதான்  உயர்வாங்க

No comments:

Post a Comment