இனியும்-ஒங்க தயக்கம்-ஏனுங்க எங்க சங்கத்திலே வந்து-சேருங்க
எலியும்-பூனை போல-யாருங்க கொண்ட நட்பில்நாங்க உயிருக்குயிருங்க
இனியும்-ஒங்க தயக்கம்-ஏனுங்க எங்க சங்கத்திலே வந்து-சேருங்க
(MUSIC)
இல்லை-ஒரு சங்கம்-இது போலத்-தானுங்க என்று-நீங்க சேந்த-பிறகு சொல்லத்-தோணுங்க
அங்கத்தினர் ஒற்றுமையை வந்து -பாருங்க என்னங்க-சந்..தேகமின்னும் வந்து-சேருங்க
இனியும்-ஒங்க தயக்கம்-ஏனுங்க எங்க சங்கத்திலே வந்து-சேருங்க
(MUSIC)
ஆசையுடன் ஆண்டு -விழா நடத்துவாருங்க துள்ளல்-கொண்டு பெரியவரும் ஆடுவாருங்க
ராகத்தோடு ஓர்-குரலாய் பாடுவாருங்க சோகங்களை பாடலினால் போக்குவாருங்க
சங்கம்-தனில் சேர்ந்திடவே தயங்காதீங்க எல்லாரும் ஓர்-குலமே வந்து-சேருங்க
எவ்விடத்தில் இது-அனைத்தும் இருக்கு-காட்டுங்க அன்பு-மனங்கள் சேரும்-சங்கம் கோயில்-போலங்க
இனியும்-ஒங்க தயக்கம்-ஏனுங்க எங்க சங்கத்திலே வந்து-சேருங்க
(MUSIC)
தேடும்போது எதுவும்-எளிதில் கிடைத்திடாதுங்க தேடாமல் கிடைத்த-செல்வம் சங்கம்-தானுங்க
வாடும்போது மகிழ்வளிக்கும் சங்கம்-பாருங்க வாஞ்சையோடு உதவிசெய்யும் துணையதானுங்க
அகப்படாது இதனைப்-போல சங்கம்-தானுங்க சுகப்படாது தனிமை-என்றும் துக்கம்-தானுங்க
விடப்படாது நீங்க-இந்த தங்க-வாய்ப்பங்க ஒதுக்கிடாது சிறுவன்-எந்தன் பேச்சக் கேளுங்க
இனியும்-ஒங்க தயக்கம்-ஏனுங்க எங்க சங்கத்திலே வந்து-சேருங்க
No comments:
Post a Comment