Monday, January 11, 2016

61.நாம நல்லா இருக்கோணும்( நீங்க நல்லா இருக்கோணும் ) **


சதை-நகமாய் முத்துத்-திருநகரில்  வாழ்ந்திடவே .
அன்பெடுத்துத் தனது-மனக்  கனிவெடுத்து  எருவாக்கி.
சளைக்காமல்-தினம் உழைப்பு-எனும்  நீரூற்றி
ஒரு தளர்ச்சி காணாமல்-இருக்க உவகை-எனும் கோல்-நட்டு-இவ்வூரில்
சங்கத் தரு-வளர்த்தார்
சங்கம்-நாடியவர் மனம்-பொங்க இடர் போக்க
தங்கள் சொந்த-நலம் தனை-மறந்து நகரினிலே சேவையினைச் செய்து
சிறந்த மாதிரியாய்த் தான்-நடந்து (Short Music)
நம்-நகரில் ப்ரச்சனைகள் தோன்றும்-பொழுதெல்லாம் ஓடி விரைந்து-வந்து நம்மை-ஒன்றாக்கி இடர்போக்கி நடப்பதுவாம் நமதருமை சங்கமன்றோ..!
செய்யும் பணியெல்லாம் வகைப்-படுத்தி சீர்தூக்கி
தர்மம் குலைந்திடா-நல்பான்மையால் எல்லோர்க்கும்
சொந்தமெனத்  தானே திகழுகின்ற சங்கமிதே..! ங்கு-நீர் வந்து பாடீர்..
வாழ்த்துக் கவி…. நெஞ்சம் வாழ்த்தும் கவி..வாழ்த்துக் கவி..
______________

நாம நல்லா-இருக்கோணும் என்று-அன்பாக 
சங்கம் புரியும்-சேவை தன்னை-ஐயா போற்றிப் பண்பாடு
(2)
என்றும்-வந்தவரை வாழவைக்கும் தமிழர் பண்பாடு 
என்று புரியுது பார் சங்கம் சேவை இன்றும் அன்போடு 
என்றும்-வந்தவரை வாழவைக்கும் தமிழர் பண்பாடு 
என்று புரியுது பார் சங்கம் சேவை கண்ட பிற்பாடு
நாம நல்லா-இருக்கோணும் என்று-அன்பாக 
சங்கம் புரியும்-சேவை தன்னை-ஐயா போற்றிப் பண்பாடு 
(MUSIC)
தழைத்திட வேண்டும்-என்று வாழ்த்து பாடுங்கள் 
உலகம் உள்ள மட்டும் வாழப் பாடுங்கள்
தழைத்திட வேண்டும்-என்று வாழ்த்து பாடுங்கள் 
சங்கம் உள்ள மக்கள் வாழப் பாடுங்கள்
வேற்றுமையே இல்லாத சமுதாயம்-காண செய்த-பணி தன்னைச் சொல்லிப் பாடுங்கள் 
ஐயா சங்கப்-பணி போற்றி வாழ்த்திப் பாடுங்கள் (2)
நாம நல்லா-இருக்கோணும் என்று-அன்பாக சங்கம் செய்யும்-சேவை மட்டுமன்றோ மனிதப் பண்பாடு 
(MUSIC)
வாட்டம்கொண்டு சோர்ந்த பொழுது உதவுகின்ற சங்கம்
காட்டம்-இன்றி மலர்ந்த-முகத்தில் சேவை செய்யும் சங்கம்
நாம் வாட்டம்கொண்டு சோர்ந்த பொழுது உதவுகின்ற சங்கம்
காட்டம்-இன்றி மலர்ந்த-முகத்தில் சேவை செய்யும் சங்கம்
பேராசை-சண்டை வம்பு-தும்பு எதுவும்-இங்கு இல்லை 
பொது-நலமே இருக்கும்-சங்கம் அமைதி-பூக்கும் கொல்லை
(2)
அமைதி என்ற முல்லை
நாம நல்லா-இருக்கோணும் என்று-அன்பாக 
சங்கம் புரியும்-சேவை தன்னை-ஐயா போற்றிப் பண்பாடு
(MUSIC)
நாளும்-சங்கம் நகரில்-அன்பின் சேவை-புரியுது 
அருகே கோவில்-கொண்ட சாமி-ரெண்டும் அருளைப்-புரியுது
நாளும்-சங்கம் நகரில்-அன்பின் சேவை-புரியுது 
அதனால் வல்லப-கணபதி வீர-மாருதி அருளும் கிடைக்குது 
சேர்ந்து-வாழ்த்திப் பாடுவோம்-வா சங்கப்-புகழையே (2)
உலகில் ஒருமைக்கு-வேறு பெயரெது-வென்றால் நமது-சங்கமே நமது-சங்கமே 
நாம நல்லா-இருக்கோணும் என்று-அன்பாக 
சங்கம் புரியும்-சேவை தன்னை-ஐயா போற்றிப் பண்பாடு
(MUSIC)
நிதியைப்-போல நாம்-நிம்..மதியைக் கருதிடவேண்டும் 
விலையைபோலே அதற்கு-ஒருமை தனைத்-தர வேண்டும்
மானம்-போல அதனைக்-காக்க உயிர் விடவேண்டும் 
யாரும்-போற்ற நகரில் ஒருமை விளங்கிட வேண்டும் 
நாம நல்லா-இருக்கோணும் என்று-அன்பாக 
சங்கம் புரியும்-சேவை தன்னை-ஐயா போற்றிப் பண்பாடு
(2)



No comments:

Post a Comment