RECORDING
வாராய் என்-தோழி வாராயோ நல்-வாழ்த்துப் பாட வாராயோ (2)
பல்லாண்டு-சங்கம் இனிதே-வாழ இவர்-ஓதும் வேதம் கேளாயோ
(மந்த்ரம்) + (MUSIC)
உலகெங்கும் இருக்கும்-பிரிவே அதில் சுயலாபம்-தேடும் பொழுதே
பலர்-கூட-ஆல மரம்போலே உருவான-சங்கம் இதுதானே
நலம்-வாழி-சங்க நலம்-வாழி பல்லாண்டு-கோடி பலர்-கூடி
வாராய் என்-தோழி வாராயோ நல்-வாழ்த்துப் பாட வாராயோ
தனியான-சோகம் களைவார் உயர்-நட்பாலே பாசம்-பொழிவார்
கனிபோலப்-பேசி மகிழ்வால் பல பண்-பாடிச் சோர்வு-களைவார்
எதுவந்த போதும் பொது-தானே எனச்-சொல்லும் சங்கம் இதுதானே
வாராய் என் தோழி வாராயோ நல்-வாழ்த்துப் பாட வாராயோ
(மந்த்ரம்) + ( MUSIC )
சிறிதாகத் தோன்றும்-கரமும் இங்கு-பலதாகப் பெருகும்-உரமும்
அயராத வேர்வை-உழைப்பும் தர்மம்-பிறழாத நேர்மைப்-பிழைப்பும்
எனக்-கொண்டு தொண்டு இது-போலே செயும்-சங்கம்-ஏது புவிமேலே
எது-கூறு கூறு இது-போலே ஒரு-சங்கம் இந்தப் புவி-மேலே
பல்லாண்டு-சங்கம் இனிதே-வாழ இவர்-ஓதும் வேதம் கேளாயோ
வாராய் என்-தோழி வாராயோ நல்-வாழ்த்துப் பாட வாராயோ
( MUSIC )
No comments:
Post a Comment