Friday, February 19, 2016

70. நமது சங்கம் (வளர்ந்த கலை மறந்து விட்டாள்) **

நல்ல-சங்கம் ஒளிரும்-தங்கம் போல-தான் அய்யா 
அது நிலைத்து-நிற்கக் காரணம்-யார் கூறய்யா மெய்யா
(2)
குடும்பம்-தனைப் போலச்-சேர்ந்து வாழ்ந்திட்டால்-ஒண்ணா 
சங்கம் சிறக்க-ஒண்ணு இதுக்கு-மேலும் வேணுமா- என்னா 
(2)
நல்ல-சங்கம் ஒளிரும்-தங்கம் போல-தான் அய்யா 
அது நிலைத்து-நிற்கக் காரணம்-யார் கூறய்யா மெய்யா
(MUSIC)
ஏசல்-பூசல் தீசல்-தீங்கு இல்லையே-ஐயா (2)
ஒட்டுறவாய் வாழும்-சங்கம் தன்னிலே ஐயா
சேர்ந்து ஒற்றுமையாய் வாழும்-சங்கம் தன்னிலே ஐயா
பேதமில்லா சங்கம்-தன்னைப் பாரய்யா-ஐயா
மத பேதமில்லா சங்கம்-தன்னைப் பாரய்யா-ஐயா
அதன் சாட்சி-போல பலர்-இருக்கார் பாரய்யா மெய்யா
மனதின்-அன்பைப் பார்க்கக்-கண்ணால் முடியுமா-ஐயா
அதை உணர்ந்திடலாம் நல்ல சங்கம் தன்னிலே அய்யா
நல்ல-சங்கம் ஒளிரும்-தங்கம் போல-தான் அய்யா 
அது நிலைத்து-நிற்கக் காரணம்-யார் கூறய்யா மெய்யா
(MUSIC)
ஒருமையைப்-போல் பெருமை-உண்டா கூறய்யா-மெய்யா (2)
அதன் சிறப்பைச்-சொல்ல இன்னும்-நூறு பாடய்யா ஐயா (2)
சிறப்பையெல்லாம் பாட்டில்-சொல்ல முடியுமா ஐயா 
எங்கும்-நிறைந்திருக்கும் அன்பு-ஏட்டில் அடங்குமா ஐயா
நல்ல-சங்கம் ஒளிரும்-தங்கம் போல-தான் அய்யா 
அது நிலைத்து-நிற்கக் காரணம்-யார் கூறய்யா மெய்யா
(MUSIC)
நேற்று-வரை நடந்ததெல்லாம் சரித்திரம் அய்யா (2) 
அது-எப்பொழுதும் தொடர-ஒன்றி வாழணும் மெய்யா (2)
அது-இல்லாமல் நமக்கு-வாழ்வு ஏதய்யா-ஐயா(2)
நாம்-தழைக்கணும்னா அதுக்கு-வழி ஒருமை தான்-ஐயா
ஒருமை என்றால் பலரின் முயற்சி என்றுதான் அய்யா 
அதை ஒருத்தர் முயற்சி என்று சொன்னால் மடமை தான் மெய்யா 
நல்ல -சங்கம் ஒளிரும்-தங்கம் போல-தான் அய்யா 
அது நிலைத்து-நிற்கக் காரணம்-யார் கூறய்யா மெய்யா
குடும்பம்-தனைப் போலச்-சேர்ந்து வாழ்ந்திட்டால்-ஒண்ணா 
சங்கம் சிறக்க-ஒண்ணு இதுக்கு-மேலும் வேணுமா- என்னா 
(2)
நல்ல -சங்கம் ஒளிரும்-தங்கம் போல-தான் அய்யா 
அது நிலைத்து-நிற்கக் காரணம்-யார் கூறய்யா மெய்யா
அது நிலைத்து-நிற்க அனைவரும் தான் கரணம் அய்யா 

No comments:

Post a Comment