Tuesday, February 21, 2017

76. என்றும் விளங்கிடும் வேதம்(தென்றல் உறங்கிய போதும்) **


RECORDING


 

என்றும்-விளங்கிடும் *வேதம் நன்று-வழங்கிய போதம்
ஒற்றுமை ஒற்றுமை--தான் என்றும் ஒற்றுமை ஒற்றுமை-தான்
எங்கள் சங்கத்திலும்-அதுதான்
(2)
(Short Music)
ஒற்றுமை-தந்திடும் நேசம் அதனில்-விளைந்த பாசம்
கொண்டு-திகழ்ந்திடுவோம்-சங்கம் தன்னை-வளர்த்திடுவோம்
சங்கம் தன்னில்-வளர்ந்திருப்போம்
(MUSIC)
வாழும்-உலகிலே-யாரும் உறவைப்-போலவே
உறவைப் போலவே
(Short Music)
**ஜாதி-மதமுமே குலமும் ஒன்று-ஆகுமே நன்று-ஆகுமே

என்று-சொன்ன மூலன்-வாக்கு வேத-வாக்குதான்
எங்கள்-சங்கம் தன்னில்-நாங்கள் கொண்ட போக்குதான்
(2)
அன்பில்-கலந்தே வாழும் சுமுக-நிலையைக் கூட்டும்
ஒற்றுமை-ஒற்றுமை தான்-எங்கள் சங்கத்திலும்-அதுதான்
என்றும் சங்கத்திலே-அதுதான்
(MUSIC)
ஆ..
சுமுகமாகவே தங்கள் உறவு-போலவே குலவி-வாழுதே
(VSM)
அதனைப்-போலவே நாமும் வாழ-வேண்டுமே என்று-கூறியே
பாரும் போற்றிப் பேச-நாங்கள் கூடி வாழுவோம்
நேசப்-பூவின் மாலை-சூடி ஆடிப்-பாடுவோம்
யாரும் போற்றிப் பேச-நாங்கள் கூடி வாழுவோம்
நேசம்-பூண்டு இன்று-போல என்றும்-பாடுவோம்

அன்பில்-கலந்தே வாழும் சுமுக-நிலையைக் கூட்டும்
ஒற்றுமை-ஒற்றுமை தான்-எங்கள் சங்கத்திலும்-அதுதான்
என்றும் சங்கத்திலே-அதுதான்
ஒற்றுமை-தந்திடும் நேசம் அதனில்-விளைந்த பாசம்
கொண்டு-திகழ்ந்திடுவோம் சங்கம் தன்னை-வளர்த்திடுவோம்
சங்கம் தன்னில் வளர்ந்திருப்போம்
(BOTH)


* மனிதர்களையும் தேவர்களையும் படைத்து இறைவன் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருங்கள் என்று உபதேசித்தான்.  ‘மனிதர்களே நீங்கள் தேவர்களைப் போற்றி அவிசொரிந்து வேண்டியவைகளைப் பெற்று நலமாக வாழுங்கள், தேவர்களே நீங்கள் மனிதர்கள் யக்ஞத்தில் சொரியும் அவியை உணவாக ஏற்று மகிழ்ந்து அவர்களை அருளி , இப்படி ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் வாழுங்கள் என்று பணித்தார் என்பது வேத வாக்கு.


**ஒன்றே குலம் ஒருவனே தேவன் 



No comments:

Post a Comment