வாரீரோ நகருளோரே கேளீரோ சங்கக் கதையே (2)
கேளீரோ நகருளோரே
பல-காலம் முன்னர்-தனியாய் இருந்தார்-ப்ரச்சனை அதனால் (2)
தீர்க்கவி..யலாது-எனவே அமைத்தனர்-சங்கத்தை
நன்றே
(SM)
வாரீரோ நகருளோரே கேளீரோ சங்கக் கதையே (2)
கேளீரோ நகருளோரே
ப்ளாட்டுகளே-எங்கும் அதனால் ரோடுகளோ-கொஞ்சம் அதனால்
(2)
இருப்பது கூப்பிடும்-தூரம் அடைந்திட சுத்தணும் காதம்
வாரீரோ நகருளோரே கேளீரோ சங்கக் கதையே
கேளீரோ நகருளோரே
அரசினை நம்பி-இராது அவர்களைக் குறையும்-சொல்லாது (2)
அமைத்து விட்டார்-தெரு பாரு புகழேந்தித் தெரு-அதன் பேரு
வாரீரோ நகருளோரே கேளீரோ சங்கக் கதையே
கேளீரோ நகருளோரே
பொதுப்-பணி செய்வார் ஓடி உறவின..ரைப்-போல் கூடி (2)
என்றைக்கும் இப்படி என்றால் அதிசயம் ஆனால் நிஜமே
வாரீரோ நகருளோரே கேளீரோ சங்கக் கதையே
கேளீரோ நகருளோரே
(BOTH)
No comments:
Post a Comment