Tuesday, March 28, 2017

90. பேதம்-ஏது சங்கத்திலே(பாலக்காட்டு பக்கத்திலே) **


KARAOKE



பேதம்-ஏது சங்கத்திலே-நாம் எல்லாரும்-ராஜா
இங்..கெவருக்குமே எவரும்-பயந்து செய்யாரே-தாஜா
(2)
பாரம்மா இதைப் பாரம்மா பாரம்மா வந்து-பாரம்மா

ச்சேரைப் போட்டு உக்காருவாங்கண்ணு எண்ணாதே-தோழி
அவர் வேலை-செய்ய பாத்தால்-போதும் கொண்டாடுவே-நீ
(2)
பாரம்மா இதைப் பாரம்மா பாரம்மா வந்து பாரம்மா
(MUSIC)
நாமெதுக்கும் கெஞ்சிடவே தேவையே-இல்லே
நாம-கேக்காமலே சேர்ந்திடுமே உதவிகள்-வந்தே
சங்கம் என்றால் இங்கு-வந்து பார்க்கணும் என்பேனே
தோழி நானும்-சொன்ன வார்த்தையையே 
பார்த்தோரும் சொன்னாரே
கேளம்மா நீ கேளம்மா கேளம்மா இதைக் கேளம்மா

சங்கத்திலே வம்புச்சண்டை கத்தல்-இல்லையே 
ஆனால் வந்த-சண்டை விட்டிட-நாம் சொத்தையில்லையே
அடிதடியும் எங்களுக்குப் பழக்கமில்லையே
ஆனால் பொதுநலத்தைக் கெடுப்பவரை விடுவதில்லையே
கேளம்மா நீ கேளம்மா கேளம்மா இதைக்-கேளம்மா
(MUSIC)
பூக்களிலே செய்திருக்கும் நெஞ்சினைக் கொண்டோராம்
சேவைப்-பூஜையினைச் சங்கமெனும் கோயிலில் செய்தாராம்
பிற-மதத்தை அவமதித்து ஏளனம்-செய்யாராம்
ஆஹா உலகுக்குள்ளே புதியதொரு .. சமத்துவம் கண்டாராம்
கேளம்மா நீ கேளம்மா கேளம்மா இதைக் கேளம்மா

பரமசிவன் சக்தியைப்-போல் மாதரை-வைத்தார்
சங்க ஆடவர்கள் மகளிர்களை நன்கு-மதித்தார்
மாதர்களோ சோதரர்-போல் அவரை நினைத்தார்
ஆஹா பார்த்த-பேரோ ஏது-இது-போல் என்று-கண் வைத்தார்
பாரம்மா வா பாரம்மா பாரம்மா வா பாரம்மா
பேதம்-ஏது சங்கத்திலே-நாம் எல்லாரும் ராஜா
இங்..கெவருக்குமே எவரும்-பயந்து செய்யாரே தாஜா
ச்சேரைப் போட்டு உக்காருவாங்கண்ணு எண்ணாதே-தோழி
அவர் வேலை-செய்ய பாத்தால்-போதும் கொண்டாடுவே-நீ

பாரம்மா வா பாரம்மா பாரம்மா வா பாரம்மா

(BOTH)


No comments:

Post a Comment