Click here for the Original Song
வேற்றுமைகள் ஏதேதோ இங்கேதோ
ஒற்றுமையில் தீதேதோ ஏதேதோ
வாழும்வகை ஈதொன்றே வேறன்றே
சங்கமதில் தீதெங்கே யாதிங்கே
வேற்றுமைகள் ஏதேதோ இங்கேதோ
ஒற்றுமையில் தீதேதோ ஏதேதோ
(MUSIC)
தன்னலம் சேர்க்கும்-கோது தன்னையே தாக்கும்-நோயே (2)
பிறர்நலம் நோக்கும்-போது உன்னை-நீ உணர்கின்றாயே (2)
*ஏதிலார் துன்பம்-போக்க தன் துன்பம் தானே-போகும்
பிறரிடர் தனதாய்-நோக்கத் தன்னிடர் இடராப்-போகும்
வேற்றுமைகள் ஏதேதோ இங்கேதோ
ஒற்றுமையில் தீதேதோ ஏதேதோ (MUSIC)
மானிடர் ஒருமை-கொண்டே வாழ்தலின் எதுவோ-நன்றே (2)
சேவை-தான் பூஜை-என்றே சொல்லுதே கீதை-நன்கே (2)
செய்வதை நன்றாய் இன்று செய்யுவோம் ஒன்றாய் நின்று
இன்று-போல் என்றும்-வந்து பாடுவோம் அன்பாய்ச்-சிந்து
வேற்றுமைகள் ஏதேதோ இங்கேதோ
ஒற்றுமையில் தீதேதோ ஏதேதோ
* ஏதிலார் துன்பம்-தன் துன்பம்-போல் காண்கிற்பின்
தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு
No comments:
Post a Comment