Tuesday, August 18, 2015

23. பிரிவிலாமல் (ஆயர்பாடி மாளிகையில்-க்ருஷ்ண கானம்)**

 
 
 
 
( ஆயர்பாடி மாளிகையில்-க்ருஷ்ண கானம் )
 
 
பிரிவிலாமல் ஓர்-மனமாய்ச் சேர்ந்திருக்கும் சங்கம்தனைக்
கண்டிடுவீர் கண்டிடுவீர் வாரீரோ

(1+SM+1)
அங்கு வாய்-நிறைய சிரித்துக் கொண்டு தோளில்-கையைப் போட்டுக்கொண்டு
உறுப்பினர்கள் வாழ்வதனைக் காணீரோ (2)

பிரிவிலாமல் ஓர்-மனமாய்ச் சேர்ந்திருக்கும் சங்கம்தனைக்
கண்டிடுவீர் கண்டிடுவீர் வாரீரோ
(MUSIC)
அங்கத்தினர்-ப்ரச்சனைகள் தன்னைச்-சொந்த வேதனை-போல்
கொண்டு-சங்கம் தீர்ப்பதனைக் காணீரோ
(2)
அந்த ஒற்றுமையைக் கண்டிடவே போற்றியே-கொண்..டாடிடவே
வந்திடுவீர் வந்திதனைக் காணீரோ (2)

பிரிவிலாமல் ஓர்-மனமாய்ச் சேர்ந்திருக்கும் சங்கம்தனைக்
கண்டிடுவீர் கண்டிடுவீர் வாரீரோ
(MUSIC)
சோக-முகம் ஒன்றை-இங்கு காணுவது அரிதரிது
வெகுவிரைவாய் வந்திதனைக் காணீரோ
(2)
பிறர் வேதனையைத் தீர்த்திடல்-ஓர் சாதனையே என்றுணர்ந்து
சேவை செய்யும் சங்கம்தனைக் காணீரோ (2)

பிரிவிலாமல் ஓர்-மனமாய் சேர்ந்திருக்கும் சங்கம்தனைக்
கண்டிடுவீர் கண்டிடுவீர் வாரீரோ
(MUSIC)
கண்டிடாமல் இதனை-விட்டால் வேறு-எங்கு இது-கிடைக்கும்
நண்பர்களே வந்திதனைக் காணீரோ
(2)
அந்த அற்புதத்தைப் பார்ப்பதற்கும் பார்த்துப் பாடம் கற்பதற்கும்
நண்பர்களே விரைந்து-நீங்கள் வாரீரோ (2)

பிரிவிலாமல் ஓர்-மனமாய்ச் சேர்ந்திருக்கும் சங்கம்தனைக்
கண்டிடுவீர் கண்டிடுவீர் வாரீரோ (2)
 
 


No comments:

Post a Comment