( நான் அனுப்புவது கடிதம் அல்ல )
நான் என்றிடுவோர் இங்கே இல்லை அண்ணே
நாம் என்றிடவே தொல்லை இல்லை அண்ணே
இச் சங்கம்-தனில் பிரிவே இல்லை
(2)
நான் என்றிடுவோர் இங்கே இல்லை
(MUSIC)
நிலவுக்கு குளிர்வதுதான் உயர்வு
மீனுக்கு நீரினில் தான் உயிரு
(2)
மலருக்கு மணப்பதனால் உயர்வு (2)
சங்கத்துக்கொருமையில்-தான் உயிரு
எனது என்றிடுவோர் இங்கே இல்லை அண்ணே
நாம் என்றிடவே தொல்லை இல்லை அண்ணே
இச் சங்கம் தனில் பிரிவே இல்லை
நான் என்றிடுவோர் இங்கே இல்லை
(MUSIC)
எத்தனையோ பொருள் இருந்தும் என்றும்
தனித்திருந்தால் ஏக்கம்-ஒன்றே மிஞ்சும்
(2)
நல் மனங்கள் இணைந்திருக்கும் சங்கம் (2)
சேர்வதனால் வந்திடுமோ துன்பம்
நான் என்றிடுவோர் இங்கே இல்லை அண்ணே
நாம் என்றிடவே தொல்லை இல்லை அண்ணே
இச் சங்கம்-தனில் பிரிவே இல்லை
வா சேர்ந்திடுவாய் இன்றே அண்ணே
அண்ணே
No comments:
Post a Comment