Monday, September 14, 2015

40. நான் என்னென்று (நீ என்னென்ன சொன்னாலும் கவிதை) **




( நீ என்னென்ன சொன்னாலும் கவிதை )
நான் என்னென்று சொல்வேனோ அறியேன்
 விலை என்றொன்..றளிப்பேனோ அறியேன்
 (2)

பல்-நெஞ்சொன்று பட்டாலே இனிமை
 இந்த சங்கத்துக்..கது-தானே பெருமை
(2)
 இனிமை.. பெருமை
(MUSIC)


தான்-தன் பணியெனத் தனிமையில் இருந்து (2)
பின்னர் சங்கம்-வந்து இணைந்தனர் உவந்து (2)
இந்தா பிடியென கரங்களில் அளித்து (2)
இதுதான் இடமென இருந்தனர் உணர்ந்து ஒருமையில் இணைந்து

நான் என்னென்று சொல்வேனோ அறியேன்
விலை என்றொன்..றளிப்பேனோ அறியேன்
(MUSIC)

என்றும் நகரினில் அன்பினைப் பகிர்ந்து (2)
பொங்கும் சிரிப்பினில் ஆனந்தம் அடைந்து (2)
என்றும் பொதுநல நினைவுடன் இருந்து (2)
சங்கம் நமதென இருப்பவர் சிறப்பு சொல்வது சிறப்பு

நான் என்னென்று சொல்வேனோ அறியேன்
(MUSIC)

வெள்ளித் திரு-விழா தரும்-கலை விருந்து
வெற்றிப் பரி..சுகள் வரும் பல மடங்கு
அன்பாய் அனைவரும் ஒருமையில் கலந்து
சங்க உயர்வினை போற்றுவர் சிறந்து

 பலர்-தனை-மறந்து

நான் என்னென்று சொல்வேனோ அறியேன்
விலை என்றொன்..றளிப்பேனோ அறியேன்
பல் நெஞ்சொன்று பட்டாலே இனிமை
இந்த சங்கத்த்துக்..கது-தானே பெருமை

No comments:

Post a Comment