Monday, September 14, 2015

44. ஞாயிறு முடிவு செஞ்சாச்சு(ஞாயிறு என்பது கண்ணாக) **

( ஞாயிறு என்பது கண்ணாக )

ஞாயிறு-முடிவு செஞ்சாச்சு திங்கள் செயல்படச் சென்றாச்சு
செவ்வாய் நன்கே முடிச்சாச்சு என்றே சங்கத்தின் செயல்பாடு

(2)
நேற்றைய-பொழுது அன்போடு இன்றைய-பொழுது பண்போடு
நாளுமெப்பொழுதும் கைசேர்த்து ஒன்றாய்த் திகழ்சங்கம் நீ பாரு

(2)
(MUSIC)

அனுதினம் துணையாய் சங்கமிருக்க
வேறொரு துணையை நான் வேண்டேன்

(2)
சங்கத்தின்-ஒற்றுமை வழி-காட்ட செய்வது ஏதென நான் நில்லேன்

(2)
ஞாயிறு முடிவு செஞ்சாச்சு திங்கள் செயல்படச் சென்றாச்சு
நாளுமெப்பொழுதும் கைசேர்த்து ஒன்றாய்த் திகழ்சங்கம் நீ பாரு
(MUSIC)

முன்னொரு-பிறப்பில் சோத
ரே இனும்வரும் பிறப்பிலும் தொடரணுமே
(2)
என்றொரு நினைப்பே இருக்கிறதே சங்கத்தில் இருப்பவர் மனத்தினிலே

(2)
(SM)

ஞாயிறு முடிவு செஞ்சாச்சு திங்கள் செயல்படச் சென்றாச்சு
நாளுமெப்பொழுதும் கைசேர்த்து ஒன்றாய்த் திகழ்சங்கம் நீ பாரு

No comments:

Post a Comment