Monday, September 14, 2015

43. ராஜபோகம் அதைத் தருமோ(நாதஸ்வர ஓசையிலே) **

Click here to listen to the Original Track
( நாதஸ்வர ஓசையிலே )


ராஜபோகம் அதைத் தருமோ செல்வம் அன்பின் மணம் தருமோ
சங்கம்-தரும் அனுசரிப்பை வேறெதுவும் தந்திடுமோ
ராஜபோகம் அதைத் தருமோ
ஆஹாஹஹா (4)
ஏலமிட்டு நேர்மையினை கூவிக் கூவி விற்றிடுவார் (2)
என்னும்-இந்த கலியுகத்தில் கூட-நேர்மை வழியினிலே
காண்போர்கள் வாழ்த்துரைக்க பொதுநலத்தின் செயல்புரிந்தே
அங்கத்தினர் வாழுகின்றார் அன்பின் மொழி பேசுகின்றார்
ராஜபோகம் அதைத் தருமோ செல்வம் அன்பின் மணம் தருமோ
சங்கம்-தரும் அனுசரிப்பை வேறெதுவும் தந்திடுமோ
ராஜபோகம் அதைத் தருமோ
(MUSIC)
பொய்-விடுத்து மெய் வழியில் அன்பார்ந்த சேவை தனை
சங்கமென்ற கோவிலிலே பூஜை-எனச் செய்து வர
(1+SM+1)
பொய்-விடுத்து மெய் வழியில் அன்பார்ந்த சேவை தனை
சங்கமென்ற கோவிலிலே பூஜை-எனச் செய்து வர
கைகொடுக்க தெய்வம் வரும் அறிந்திடைய்யா ஐயமில்லே
ஒருமை ஒன்று போதுமன்றோ பெருமை என்று வேறு உண்டோ
  ராஜபோகம் அதைத் தருமோ 
(MUSIC)
நட்பே ஒரு சாதனையாய் ஒற்றுமையே போதனையாய்க்
கொண்டு வாழும் சங்கம்-ஒன்று வந்து இங்கு காணு-இன்று

ஒற்றுமையை நெஞ்சில் கொண்டு எங்கள் சங்கம் வாழுதென்று (2)
சத்தியத்தைக் கூறுகிறேன் காணு-வந்து காணு-நன்றாய்

 ராஜபோகம் அதைத் தருமோ செல்வம்-அன்பின் மணம் தருமோ

சங்கம்-தரும் அனுசரிப்பை வேறெதுவும் தந்திடுமோ
ராஜபோகம் அதைத் தருமோ






No comments:

Post a Comment