Friday, March 24, 2017

86. நம் கரம் ஒன்றிணைந்தால்(பன்னிரு விழியழகை-TMS முருகன் பாடல்) **

நம்-கரம் ஒன்றிணைந்தால் அம்மா அதைப்-போல் பலம்-வருமா
நாம் ஒருமையின் வழி-நடந்தால் ஐயா நமக்கோர் இடர்-வருமா
(1+SM+1)
(Sing the the two lines below along side the music)
ஐயா அம்மா  அந்த ஒருமை இனிமை தானே
அம்மா ஐயா அந்தத் தனிமை வெறுமை தானே
 (MUSIC)
நற்-குரல் இருந்தென்ன நீ பலருடன்-சேர்ந்திசை பாடாமல்
நற்றிறம் இருந்தென்ன அது பிறருக்கு-நற்பயன் தாராமல்
நம்-கரம் ஒன்றிணைந்தால் அம்மா அதைப்-போல் பலம்-வருமா
(Sing the the two lines below along side the music)
ஐயா அம்மா  அந்த ஒருமை இனிமை தானே
அம்மா ஐயா அந்தத் தனிமை வெறுமை தானே
(MUSIC)
தங்கமும்-எதற்காக அது-மின்னிட  நகையெனச் சூடாமல்
சங்கமும்-நமக்காகப் பின்-பணியெது நமக்கதைப் பாடாமல்
நம்-கரம் ஒன்றிணைந்தால் அம்மா அதைப்-போல் பலம்-வருமா
 (Sing the the two lines below along side the music)
ஐயா அம்மா  அந்த ஒருமை இனிமை தானே
அம்மா ஐயா அந்தத் தனிமை வெறுமை தானே
(MUSIC)
வேற்றுமை ஒரு-சேறே அதில் வாடுவதேன்-கால் பாவாமல்
ஒற்றுமை பெரும்-பேறே அதில் வாழ்ந்திருப்போம்-நாம் நோவாமல்
வா..நம்-கரம் ஒன்றிணைந்தால் அம்மா அதைப்-போல் பலம்-வருமா
நாம் ஒருமையின் வழி-நடந்தால் ஐயா நமக்கோர் இடர்-வருமா
அம்மா ஐயா … ஐயா அம்மா

No comments:

Post a Comment