Friday, March 24, 2017

a) வாழிய வாழியவே (ஓம் ஜெகதீச ஹரே) **- Anuradha



KARAOKE



வாழிய வாழியவே நம் சங்கமும் வாழியவே
பாரினில் யாவரும் போற்றிட ஆயிரம் ஆண்டுகள் சீருடன்
வாழிய வாழியவே
நம் சங்கமும் வாழியவே

வாழிய வாழியவே
நம் சங்கமும் வாழியவே
பாரினில் யாவரும் போற்றிட ஆயிரம் ஆண்டுகள் சீருடன்
வாழிய வாழியவே
நம் சங்கமும் வாழியவே

பாடாய் ஒருமையைத் தோழி அதைவிட உயர்விருக்கா
தோழி அதைவிட உயர்விருக்கா
சுக துக்கமும்-நம் வாழ்வில்
சுக துக்கமும்-நம் வாழ்வில்
பகிர்ந்திடவே..றே யார்
நம் சங்கத்தைப் போலே யார்

பேதமிலாதிங்கு-யாரும் உறவெனவே இருப்பார்
யாரும் உறவெனவே இருப்பார்
இதைவிட வேறொன்று மேலாய்
இதைவிட மேலொன்று-கூறாய்
 காசுபணம் தருமோ
நல் சங்கத்தைப் போல் வருமா
நீ-நான் எனும்-பகை வருமா அனைவரும் சமம்-தானே
இங்கு அனைவரும் சமம் தானே
வேரில் சமத்துவத்தின் நீரையும்
ஊரில் பொது-நலத்தின் பேரையும்
கொண்டதனால் தானே
இது வளர்ந்தது ஆல் போலே
ஒவ்வொரு ஆண்டிலும் கூடுவர் அன்பாய்க் கூடுவரே
இங்கு அன்பாய் கூடுவரே
ஆ ..ஆ .. என்றிசை-பாடி
வா வா என்று கொண்டாடி
நன்றாய்-ஒன்றாய் களிப்பார்
அந்த சங்கத்தை வாழ்த்திட வா
குடும்பத்தைப் போலிங்கு யாவரும் இணைந்தே-வாழும்படி
யாரும் இணைந்தே-வாழும்படி
அமைந்தது மேலான-சங்கமும்
இதைவிட மேலா-அத்..தங்கமும்   
அதுவே எமக்கு-நிதி
நம் சங்கமும்-வாழியவே
வீண்-வம்புப் பேச்சிங்கு வருமா செய்வார் பல-சேவை
இங்கு செய்வார் பல சேவை
சிவனே என்றிருப்போரும்
எனக்கேன் என்றிருப்போரும்
மாறிடுவார் பாரேன்
ஆம் சேர்ந்திடுவார் கூடே

விஷயமிதே போல்-பலவும் சொல்லிடுவோம் கேளாய்
நாங்கள் சொல்லிடுவோம் கேளாய்
அழகாய் ஆண்டு விழாவில்
அதுதான் எங்களின்-வேலை
 சங்கத்தில் எம்-சேவை
அதன் மேலும் உண்டோ தேவை

வாழ் வாழிய வாழியவே நம் சங்கமும் வாழியவே
பாரினில் யாவரும் போற்றிட ஆயிரம் ஆண்டுகள் சீருடன்
வாழிய வாழியவே
நம் சங்கமும் வாழியவே






No comments:

Post a Comment