Monday, August 7, 2017

98. எண்ணம் ஒன்றாய்(கண்ணன் வந்தான்) **


விருத்தம்
சொல்லினால் முடிவதில்லை கூட்டுறவின்-சிறப்பு
வீட்டுறவும் நாட்டுறவும் கூட்டுறவின் மீது
தனிமரம்  தோப்பாமோ யார்க்கும் பிரிவாமோ
உரைப்பாயே ஒற்றுமைக்கு மேலாய் ஒன்றை

________________________
(MUSIC)
எண்ணம்-ஒன்றாய் எண்ணும் எண்ணம்-ஒன்றாய்
கொண்டு வாழ்வோரைக் கொண்டதே சங்கம்-நண்பா
(2)
சங்கம்-நண்பா ..
(MUSIC)

பேசுகின்ற பேச்சினிலே சொல்லும்-ஒன்றாய்
செய்வதொன்று நன்று-என்று  செய்கை-நன்றாய்
(2)
ஒற்றுமைக்கு ஏற்றபடி எதுவும்-ஒன்றாய்
கேள்விகளே இல்லாமல் எதுவும்-நன்றாய்
தர்மம்-சொன்ன வழியில்-மேவி என்றும்-பண்பாய்
மேலாகப் பணியாற்றும் சங்கம் ஒன்றாம்
சங்கம்-ஒன்றாம் எங்கள் சங்கம்-நன்றாம் சங்கம்-நன்றாம்
எண்ணம்-ஒன்றாய் எண்ணும் எண்ணம்-ஒன்றாய்
கொண்டு வாழ்வோரைக் கொண்டதே சங்கம்-நண்பா
சங்கம்-நண்பா ..
(MUSIC)

இடரதனைத் தீர்த்துவைக்க ஒன்றாய்-மனம்
கூடி-எதுவும் பார்த்து-பார்த்து செய்யும் இடம்
(2)
உதவிகளை சேவையென்று நன்றே-பெரும் 
சேவைதனைப் பூஜை-என்று ஒன்றாய்-மனம்  
(2)
சளையாமல் தினமுழைக்கும் சங்கமாகும்
மங்காமல் மின்னிவரும் தங்கமாகும்
தங்கமாகும் சொக்கத்-தங்கமாகும் சங்கமாகும்
எண்ணம்-ஒன்றாய் எண்ணும் எண்ணம்-ஒன்றாய்
கொண்டு வாழ்வோரைக் கொண்டதே சங்கம்-நண்பா

சங்கம்-நண்பா ..
நண்பா ..ஆ  நண்பா நண்பா
(Short Music)
ஒருமை-மின்னும் வாழ்க்கை-வாழ்ந்து காட்டும்-சங்கம்
மோதல் என்னும் பேய்-ஒட்டிப் போக்
கும்-சங்கம்
(2)
இன-ஒருமை பெருமை-தன்னைப் பாடும்-சங்கம்
என்றும்-நின்று வாழும் நிலையான சங்கம்
(2)
தீமையில்லை அதனிடத்தில் என்றும்-நண்பா
தயக்கமேன் அதில்-சேர வருவாய் நண்பா
(2)
நண்பா ..
வா-வா  .. வா-வா  நண்பா

எண்ணம்-ஒன்றாய் எண்ணும் எண்ணம்-ஒன்றாய்
கொண்டு வாழ்வோரைக் கொண்டதே சங்கம்-நண்பா
சங்கம்-நன்றாம்  .. சங்கம்-நன்றாம்

(ALL)





No comments:

Post a Comment