Wednesday, August 9, 2017

100. தேரோடும் எங்கள் சங்கத் தேரோடும்(ஆறோடும் மண்ணில்) ****


(Aligned to KARAOKE)

தேரோடும் எங்கள்-சங்கத் தேரோடும்
ஊர்பாடும் வண்ணம் சங்கத் தேரோடும்
(2)
போராடும் பேச்சே-இல்லை யாரோடும் பேதம் இல்லை
பாராட்டுப் பேர் ஒன்று தான்

தேரோடும் எங்கள்-சங்கத் தேரோடும்
ஊர்பாடும் வண்ணம் சங்கத் தேரோடும்

(MUSIC)
மண்ணிலே ஊனைத்-தந்து உயிரும்-தந்து ஊணும்-தந்து
தன்னிலே தானே-செய்யும் திறமை தன்னை அழகாய்த்தந்து
நெஞ்சிலே ஈரம் என்னும் வடிவில்-தானும் உள்ளிருந்து
கொஞ்சமும் தன்னை வெளியில் காட்டாத எளிமை-கொண்டு
சேராயோ ஒன்றாய்க்-கூடி வாழாயோ
என்றானே இறைவன் நம்மைத் தேறாயோ
தேரோடும் எங்கள்-சங்கத் தேரோடும்
ஊர்பாடும் வண்ணம் சங்கத் தேரோடும்
(MUSIC)

பந்தம்-என்ற ஒன்றில்-கட்டி நம்மை-விட்டதேனம்மா (2)
உலகம்-என்ற மேடைமேலே நானும்-நீயும் ஏனம்மா
நானும்-நீயும் ஏனம்மா 
அண்ணன்-தங்கை போல-நாமும் வாழவேண்டும் ஆமம்மா
இறைவனின் பாசம்-என்னும் திருவுளம்-தானம்மா
திருவுளம் தானம்மா
போராடும் பேச்சே-இல்லை யாரோடும் பேதம் இல்லை
பாராட்டுப் பேர் ஒன்று தான் 

தேரோடும் எங்கள்-சங்கத் தேரோடும்
ஊர்பாடும் வண்ணம் சங்கத் தேரோடும்
(MUSIC)
பொய்விட்டு பேதம் விட்டு அன்பைக் கொண்ட உள்ளம்-கொண்டு
உள்ளோரின் நட்பைப்-பெற்றால் சொர்க்கம்-பூமி தானே அம்மா
பார்-தன்னில் தங்கம்-என்று பேர்-பெற்ற சங்கம்-பாரு (2)
ஊரெல்லாம் சேர்ந்தே-கூடி இழுக்கின்ற சங்கத்-தேரு
அழகான சங்கத்தேரு
(Pause)
போராடும் பேச்சே-இல்லை யாரோடும் பேதம் இல்லை
பாராட்டுப் பேர் ஒன்று தான் .. ஆ


தேரோடும் எங்கள்-சங்கத் தேரோடும்
ஊர்பாடும் எங்கள் சங்கத் தேரோடும்
போராடும் பேச்சே-இல்லை யாரோடும் பேதம் இல்லை
பாராட்டுப் பேர் ஒன்று தான்
(ALL)









No comments:

Post a Comment