கெடைக்குமா நமக்கு-இந்த ஒறவு
நீ சொல்லு-மத்த எடத்தப்-பாத்த பொறவு
(2)
சாமியா குடுக்க-வந்தது பாரு
காசு பணங்குடுத்தா கெடைச்சுடாத சீரு சீரு..
கெடைக்குமா நமக்கு-இந்த ஒறவு
நீ சொல்லு-மத்த எடத்தப்-பாத்த பொறவு
(MUSIC)
மாறி-வரும் பூமி.. ஓ.. அதில்-ஆளுக்கொரு சாமி
மாறி-வரும் பூமி அதில்-ஆளுக்கொரு சாமி
இங்கு எம்மதமும்-சம்மதமே என்று-தானே நீதி
கிருத்துவங்க உறவுதான் அல்லா-ஏசு கடவுள்-தான் (2)
சங்கம்-பொறுத்தவரை பிரிவினையைத் தேடிக் கண்டு பிடிக்கணும்
கெடைக்குமா .. ? தேடு….!
கெடைக்குமா நமக்கு-இந்த ஒறவு
நீ சொல்லு-மத்த எடத்தப்-பாத்த பொறவு
(MUSIC)
என்னிக்கும்-நிக்குற சங்கத்துல-நான் சேந்த பொறவு-தான்
பாரு வந்துச்சு-அக்கா எனக்கு-எக்கச் சக்க ஒறவு-தான்
வீட்டுக்குள்ள இருக்குறப்போ ஒறவு கொறவு-தான் (2)
சங்கம் வந்து-சேந்த பொறவு-நகரு ஃபுல்லா-ஒறவுதான்
நகரு பூரா எல்லாம் ஒறவுதான்
கெடைக்குமா ..
கெடைக்குமா நமக்கு-இந்த ஒறவு
நீ சொல்லு-மத்த எடத்தப்-பாத்த பொறவு
(MUSIC)
நகருக்குள்ளே மொத-மொதல்லா எனக்கு-எல்லாம் புதுசு
சங்கம் சேர்ந்ததுமே கெடச்சதெல்லாம் டன்-கணக்கா சொகுசு
(2)
உனக்கும்-எனக்கும் என்னிக்கக்கா அக்கா-தங்க ஒறவு (2)
சங்கமிண்ணு-ஒண்ணு சேந்துப்புட்டோம் எல்லாம்-அதுக்குப் பொறவு
கெடைக்குமா .. ? தேடு….!
கெடைக்குமா நமக்கு-இந்த ஒறவு
நீ சொல்லு-மத்த எடத்தப்-பாத்த பொறவு
சாமியா குடுக்க-வந்தது பாரு
காசு பணங்குடுத்தா கெடைச்சுடாத சீரு சீரு..
கெடைக்குமா நமக்கு-இந்த ஒறவு
நீ சொல்லு-மத்த எடத்தப்-பாத்த பொறவு
No comments:
Post a Comment