Friday, August 9, 2019

103. ஒன்றெனக் கூடிடுவோம்(செந்தமிழ்த் தேன் மொழியாள்) **





விருத்தம்
நன்றென்று பலது  எனதுடைமை  மாத்திரமே ..
உண்டென்று கூறி தனித்த-வழி போனா..லே
உள்ளதும்-போம் நண்பா ..!
பெரும்-சோகம் காண்பாய்
நிற்குமோ ஆஸ்தி ... நிலைக்குமோ செல்வம்..
பணம்-தருமோ வாழ்வை...
. .........
_____

ஒன்றெனக் கூடிடுவோம் சிறாரென  சிரித்தே பாடிடுவோம்
 சிறாரென சிரித்தே  பாடிடுவோம்
(SM)
பிரிவினைப்-பிரிந்து உறவினில் கலந்து சிறப்பினை அடைந்திடுவோம்
(MUSIC)
நாற்றினை நடுவது-போல் அழகாய் நட்பினை-நட்டிடுவோம் 
 ஆ.ஆ ..ஆ..ஆ...ஆ.
நாற்றினை நடுவது-போல் அழகாய் நட்பினை-நட்டிடுவோம்
சோற்றினை அளிக்கும் நெல்லாவது-போல் எல்லோரும் பயன் பெறுவோம்
வா..ஒன்றெனக் கூடிடுவோம் சிறாரென  சிரித்தே பாடிடுவோம்
 சிறாரென சிரித்தே  பாடிடுவோம்
 (SM)
பிரிவினைப் பிரிந்து உறவினில் கலந்து
சிறப்பினை அடைந்திடுவோம்
(MUSIC)
நெஞ்சினில் பேதம் களைந்திடுவோம்-நம் மனங்களில் ஒன்று கலந்திடுவோம் 
அன்புக்குள் இயங்கும் பொன்னான-உலகை  
பேரன்பால்-நாம் படைத்திடுவோம்
வா..ஒன்றெனக் கூடிடுவோம் சிறாரென  சிரித்தே பாடிடுவோம்
 சிறாரென சிரித்தே  பாடிடுவோம்
(SM)
பிரிவினைப் பிரிந்து உறவினில் கலந்து
சிறப்பினை அடைந்திடுவோம்





No comments:

Post a Comment