Saturday, August 17, 2019

105. தினமும் இறைவனிடம் பாடிடுவோம்(அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்) ****



விருத்தம்
ஒற்றுமை ..ஒற்றுமை...ஒற்றுமை.. ஆ..ஆ..ஆ.. 
என்பதே நம்-திரு மந்திரம்
தினமும் இறைவனிடம் வேண்டிடுவோம் ..ஆ..ஆ..ஆ.. 
­­­­(MUSIC)
தினமும் இறைவனிடம் பாடிடுவோம்
நமை வாழ-வைக்கும் ஒற்றுமையை நாடிடுவோம்
 (1+SM+1)
அண்ணன் தம்பி-என்றே இருந்திட-நாம் 
அவன் அருளைப் பொழிவதற்கே பாடிடுவோம் 
அண்ணன் தங்கை-என்றே இருந்திட-நாம் 
அவன் அருளைப் பொழிவதற்கே பாடிடுவோம்..ஆ..ஆ..ஆ..
தினமும் இறைவனிடம் பாடிடுவோம்
நமை வாழ-வைக்கும் ஒற்றுமையை நாடிடுவோம்
(MUSIC)
புவி என்னும் மேடையிலே கலி-நடை போடையிலே ..ஆ...ஆ..
புவி என்னும் மேடையிலே கலி-நடை போடையிலே
பிரிவெனும் பாதையிலே மக்கள்-மனம் சென்று விட்டால்
பிரிவெனும் பாதையிலே சற்றும்-மனம் சென்று விட்டால்
நெஞ்சிழந்து விடும்-அழகை தந்து-விடும் அது-அழிவை (2)
எண்ணத்தால் கூடிடுவோம் சங்கத்தை வாழவைப்போம்
சங்கத்தை வாழவைப்போம் ..ஆ..ஆ..ஆ..
தினமும் இறைவனிடம் பாடிடுவோம்
நமை வாழ-வைக்கும் ஒற்றுமையை நாடிடுவோம்
(MUSIC)
மலைமேல்  இருப்பவரும் மடுவில் தவிப்பரும் (2)
சங்கமதில் பிரிவினையால் தன்னைத்-தான் என்பவரும் (2)  
தலை மேல் கனத்தாலே கனல் போல் சினத்தாலே (2)
உள்ளத்தில் சிறுத்தவரும் சங்கத்தில் இலையென்றே 
சங்கத்தில் இலையென்றே ஆ ..ஆ..
தினமும் இறைவனிடம் பாடிடுவோம்
நமை வாழ-வைக்கும் ஒற்றுமையை நாடிடுவோம்




No comments:

Post a Comment