Thursday, September 12, 2019

113. கேட்பாயப்பா( பழம் நீயப்பா ) **




கேட்பாயாப்பா .. கொஞ்சம்  கேட்பாயப்பா 
ஒரு வார்த்தை கேட்பாயப்பா
(2)
சபை தன்னில் 
இச் சபை தன்னில் ஒருவார்த்தை உலகோர்க்கு நான்-கூற
கேட்பாயாப்பா .. கொஞ்சம்  கேட்பாயப்பா 
ஒரு வார்த்தை கேட்பாயப்பா
(MUSIC)
மரமொன்று தோப்பாகுமா 
தனி மரமென்றும் தோப்பாகுமா
ஆறு தனி-நின்று கடலாகுமா (2)
காக்கையும் தனியாய் உண்டா 
ஒரு காக்கையும் தனியாய் உண்டா
உலகத்தில் அதுபோல ஒன்றாக வாழ்தல்-மேல் 
பெரிதான பலமும் உண்டா
(MUSIC)
தான்-என்று தனிநின்று தனக்கென்று சுகம்-ஒன்று
அப்பா கண்டாரெங்குண்டு
(2)
இடரென்ற மேகங்கள் நின்றாடும் வேளையில் 
தனியானால் துணை எங்குண்டு
(2)
தாய்-கொண்ட மனம்-கொண்டு
தாய்-கொண்ட மனம்-கொண்டு இங்குள்ள சங்கத்தில் 
ஏராள..மானோர்-உண்டு
வீண் தத்துவம் இதுவென்று தள்ளினால் அப்புறம் 
உனக்கென்ன மார்க்கம் உண்டு
(MUSIC)
நல்ல-பலருடன் .. சேருவது நலம் .. அறியாத சிறுவனா-நீ (2)
பேதமெனும்-விடம் மாற்றி-விடும் தடம் தெரியாத ஒருவனா-நீ (2)
கூறு-மொழி கேளு நல்ல-இடம் நாடு (2)
சங்கத்தில் சேர-வா நீ 
ஏற்றுக்கொள்வார் கூட்டிச் செல்வார் 
நன்மையை நோக்கிப் பார் நீ (2)





No comments:

Post a Comment