Monday, October 7, 2019

119. வேற்றுமை-இல்லாத நெஞ்சங்கள்(தாயெனும் செல்வங்கள்) **

Audio of a recording of this Song

வேற்றுமை-இல்லாத நெஞ்சங்..கள்-கூடும் சங்கத்தில்-இன்பம் நிலைத்திருக்கும்
(1+SM+1)
சந்தோஷம் நின்றாடும் இந்நாளிலே 
எல்லோரும் ஒன்றாகப் பண்பாடுவோம் 
எந்நாளும்-வாழ்வில் இணைந்திருப்போம்
வேற்றுமை-இல்லாத நெஞ்சங்..கள்-கூடும் சங்கத்தில்-இன்பம் நிலைத்திருக்கும்
(MUSIC)
நல்லோர்கள் நடமாடும் சங்கம் என்று 
சான்றோர்கள் பலர்-கூறப் பேரைக்-கொண்டு
(2)
எப்போதும் பிறர்க்காக விட்டுத்-தந்து 
தானென்று-எண்ணாத நட்பைக்கொண்டு
வேற்றுமை-இல்லாத நெஞ்சங்கள்-கூடும் சங்கத்தில்-இன்பம் நிலைத்திருக்கும்
(MUSIC)
பேதங்கள் இலையென்று ஒன்றாகிடும் 
பண்பாடு எமதென்று பண்பாடுவோம் 
ஒரு-தாயின் சேய்போல ஒன்றாகுவோம் 
பிறர்க்காக பிறர்போற்ற நாம்-வாழுவோம்
வேற்றுமை-இல்லாத நெஞ்சங்கள்-கூடும் சங்கத்தில்-இன்பம் நிலைத்திருக்கும்
(MUSIC)
அன்பென்னும் வற்றாத நீர்-பாய்ச்சலாம் 
பொல்லாத-ஆடாக பேதம் எலாம் 
மேயாத நிலமாக நாம்-பேணலாம் 
சங்கத்தைக் கண்-போல நாம்-காக்கலாம்
சந்தோஷம் நின்றாடும் இந்நாளிலே 
எல்லோரும் ஒன்றாகப் பண்பாடுவோம் 
எந்நாளும்-வாழ்வில் இணைந்திருப்போம்
வேற்றுமை-இல்லாத நெஞ்சங்..கள்-கூடும் சங்கத்தில்-இன்பம் நிலைத்திருக்கும்

No comments:

Post a Comment