Friday, November 1, 2019

122. வாராய் வாராய் வாராயோ (நாளாம் நாளாம் திருநாளாம்) **



வாராய் வாராய் வாராயோ 
சங்கத்தில் இன்றைக்குத் திருநாளாம்
பலரும் இன்னிசை பா..டி ஆடும் காட்சியைக்-காண வாராயோ
(1+SM+1)
வாராய் வாராய் வாராயோ … ஓ .. 
(MUSIC)
வயதினில் மூத்த-இளைஞர்கள் 
மலர்-முகம் பூத்த-மாதர்கள் 
ஒருபுறம் மூத்த-இளைஞர்கள் 
மறுபுறம் சங்க மாதர்கள்
என்று ஆடிப்பாடும் பலருடன் 
வந்து நீயும் பாடிடச் சேருடன்
அங்கு உறவு-ராகமாய் ஒருமை-தாளமாய் சேர்ந்த-பாடலைப் பாடவா
ஓ..ஓ..ஓ.. ஓ..ஓ..ஓ.. 
ஆ ..ஆ ஆ ..ஆ
ஆ ..ஆ (BOTH)
வாராய் வாராய் வாராயோ 
(MUSIC)
ஒருபுறம் இன்றின் பாலரும்
மறுபுறம் நேற்றின் பாலரும் 
ஒருபுறம் இன்றின் இளைஞரும் 
மறுபுறம் நாளை இளைஞரும்
என ஆடிப் பாடும் காட்சிகள் 
அது கூடி வாழ்தலின் சாட்சிகள்
அங்கு உறவு-ராகமாய் ஒருமை-தாளமாய் சேர்ந்த-பாடலைப் பாடவா
ஓ..ஓ..ஓ.. ஓ..ஓ..ஓ.. 
ஆ ..ஆ ஆ ..ஆ
ஆ ..ஆ (BOTH)
வாராய் வாராய் வாராயோ சங்கத்தில் இன்றைக்குத் திருநாளாம்
பலரும் இன்னிசை பா..டி ஆடும் காட்சியைக்-காண வாராயோ
வாராய் வாராய் வாராயோ … ஓ .. 
(BOTH)





No comments:

Post a Comment