Friday, November 1, 2019

125. இதே-போல ஆண்டுதோறும் (அதோ அந்த பறவை போல) **



இதே-போல ஆண்டுதோறும் கூடவேண்டும்
இதே-போல நாமும்-ஆடிப் பாடவேண்டும்
இதே-அன்புடன் இதே-பண்புடன் (2)
கூடி-வாழ இறைவன்-அருள வேண்டுவோம்  
(SM)
இதே-போல ஆண்டுதோறும் கூடவேண்டும்
இதே-போல நாமும்-ஆடிப் பாடவேண்டும்
இதே-அன்புடன் இதே-பண்புடன்
கூடி-வாழ இறைவன்-அருள வேண்டுவோம்
(MUSIC)
லலாலா..லா (4)
(MUSIC)
காற்று-கூட இடையில்-நுழைய முடிவதில்லையே
நமது-நட்பின் நெருக்கம்-துளைத்துப் புகுதல்-இல்லையே 
புகுதல்-இல்லையே
காலம்-சென்றும் நமது-நட்பில் பிணக்கம்-இல்லையே
நாளும்-வளரும் நல்ல-நட்பு இணக்க-எல்லையே
இதே-அன்புடன் இதே-பண்புடன்
கூடி-வாழ இறைவன்-அருள வேண்டுவோம்
(MUSIC)
இதே-போல ஆண்டுதோறும் கூடவேண்டும்
இதே-போல நாமும்-ஆடிப் பாடவேண்டும்
இதே-அன்புடன் இதே-பண்புடன்
கூடி-வாழ இறைவன்-அருள வேண்டுவோம்
(MUSIC)
லலாலா..லா (4)
(MUSIC)
 தோள்-கொடுத்துத் தாங்கும்-சங்க இளைஞர்-அருகிலே 
நாளை-என்ன ஆகும்-என்ற கவலை இல்லையே
கவலை இல்லையே
வாள்-எடுக்கும் நேரம்-வரினும் பயமுமில்லையே
தூள்-கிளப்பும் அவரின்-வீரம் சளைத்ததில்லையே
இதே-அன்புடன் இதே-பண்புடன்
கூடி-வாழ இறைவன்-அருள வேண்டுவோம்
(MUSIC)
லலாலா..லா (4)
(MUSIC)
கோடி-கோடி கொண்ட-போதும் இன்பம் இல்லையே
சங்கம்-தன்னில் ஒன்றி-வாழத் துன்பம் இல்லையே
துன்பம் இல்லையே
அண்ணன்-தம்பி தமக்கை-தங்கை என்ற-உறவிலே
கூடி-வாழும் எங்கள்-நேசம் இன்ப-எல்லையே
இதே-அன்புடன் இதே-பண்புடன்
கூடி-வாழ இறைவன்-அருள வேண்டுவோம்




No comments:

Post a Comment