Wednesday, November 6, 2019

126. எது-உண்டு ஒருமைக்கு (அழகென்ற சொல்லுக்கு முருகா) **



சொல்வாய்… சொல்வாய்..
(MUSIC)
எது உண்டு ஒருமைக்கு நிகராய் 

எது உண்டு ஒருமைக்கு நிகராய் 
துன்பம் எது-வந்த போதிலும் அதுகாக்கும் மதிலாய்
(2) 
எது உண்டு ஒருமைக்கு நிகராய்
(MUSIC)
இடராக ஒன்றுமே வருமா 
மீறி வந்திடும் போதிலே துன்பமே தருமா
(2)
துணையாகப் பொருள்-கூட வருமா (2)
நீ தனியாக நட்புபோல் இதமுமே தருமா
எது உண்டு ஒருமைக்கு நிகராய் 
(MUSIC)
தேன்பலாச் சுளையுமே தனியாய் 
நீ  உண்கிற போ..தில்-க..சக்குமே நண்பா 
(2)
இணைந்தே நட்புடன் உண்டால் (2)
வெறும் நீர்-சோறும் அமுதாய்-இ..னிக்குமே நண்பா
எது உண்டு ஒருமைக்கு நிகராய் 
துன்பம் எது-வந்த போதிலும் அதுகாக்கும் மதிலாய்
எது உண்டு ஒருமைக்கு நிகராய்
(MUSIC)
எது உண்டு ஒருமைக்கு நிகராய் 
(MUSIC)
ஒன்றாகக் குறையேதும் வருமா 
தன்னந்தனியாகும் வாழ்க்கையே நிறைவேதும் தருமா  
(2)
சுத்தச்-சுவை பாலுமே நண்பா (2)
என்றும் தனியாகத் தயிருமாய் மாறுமா சொல்வாய்
எது உண்டு ஒருமைக்கு நிகராய் 
(MUSIC)
பணம் பொருள் பொன்னுக்கும் மேலாய்
நிறை-வாழ்வுக்குச் செல்வமாய் உள்ளதே-நண்பா 
(2)
அதன்-பெயர் நட்புதான் நண்பா 
அது-உயர் நட்புதான் நண்பா 
என்றே கூடியே சங்கத்தில் பாடுவோம் வா-வா
எது உண்டு ஒருமைக்கு நிகராய் 
(MUSIC)
அன்புக்கு எல்லைபோல் நன்றாய் 
இங்கு ஆண்டுக்கு ஒருமுறை கூடுவோம் ஒன்றாய்
(2) 
கண்-போல ஒற்றுமை காப்போம் (2)
என்று பண்பாடி இன்றுபோல் என்றுமே வாழ்வோம்
எது உண்டு ஒருமைக்கு நிகராய் 
துன்பம் எது-வந்த போதிலும் அதுகாக்கும் மதிலாய் 
எது உண்டு ஒருமைக்கு நிகராய்
அழகாய்.. அழகாய்..



No comments:

Post a Comment