Wednesday, November 6, 2019

127. பாட்டொன்று கேளேன்(பாட்டொன்று கேட்டேன் ) **

பாட்டொன்று கேளேன் .. இளைஞர்கள் மேலே கேளதைப் பாடிடவே 
மாபெரும் இடத்தைப் பிடித்தார் மனதில் கேளதைப் பாடிடவே
(SM)
மாபெரும் இடத்தைப் பிடித்தார் மனதில் கேளதைப் பாடிடவே 
(MUSIC)
வாவென்று-சென்றே துணை-எனக்கென்றே யாரும்-அழைக்கவில்லை ஓ
யாரும் அழைக்கவில்லை 
யாரும் அழைக்கவில்லை
தானென்று நின்றே எனக்கென்ன-வென்றே 
அவர்களும் இருக்கவில்லை  ..ஓ.. அவர்களும் இருக்கவில்லை
அவர்களும் இருக்கவில்லை
உரமும் திறமும் அவர்க்கிருந்தாலும் திமிர்க்-குணம் துளியுமில்லை 
துர்க்குணம் அவர்க்கு இல்லை  
நாளும்-முனைப்புடன் சேவை-மனத்துடன் 
கூடி-உழைத்திடும் சங்க-இளைஞரை 
வாழ்த்திடும்-பாட்டை கேட்டிடு-நீயும்  பாடிடு-பின்னாலே
மாபெரும் இடத்தைப் பிடித்தார் மனதில் கேளதைப் பாடிடவே
(MUSIC)
 நேர்கொண்ட பார்வை அனைத்திலும் நேர்மை 
கொண்டால் சோகமில்லை ஓ கொண்டால் சோகமில்லை
போர்-என்ற பாதை பதவியின் போதை கொண்டார் யாருமில்லை ஓ.. 
கொண்டார் அவரில்-இல்லை 
அனைவர் மனமும் ஒருமித்ததாலே யாரோடும் பேதமில்லை 
யாரோடும் பேதமில்லை
நாளும்-முனைப்புடன் சேவை-மனத்துடன் கூடி-உழைத்திடும் சங்க-இளைஞரை 
வாழ்த்திடும்-பாட்டை கேட்டிடு-நீயும்  பாடிடு-பின்னாலே
மாபெரும் இடத்தைப் பிடித்தார் மனதில் கேளதைப் பாடிடவே

No comments:

Post a Comment