Saturday, December 14, 2019

130. வாங்க அம்மா (வாங்க மச்சான் வாங்க) **

PART I
(KARAOKE contains I & II)

வாங்க-அம்மா வாங்க நல்ல பாட்டு கேட்டு போங்க 
வாங்க-அய்யா வாங்க நல்ல பாட்டு கேட்டு போங்க 
வாங்க-அம்மா .. 
சும்மா வாங்க-அய்யா
அம்மா வாங்க-அய்யா-வாங்க நல்ல பாட்டு கேட்டு போங்க
கூடிப் பாடுவோங்க-கத கூறிப் பாடுவோங்க (2)
வாங்க-அம்மா சும்மா வாங்க அய்யா
அம்மா வாங்க-அய்யா வாங்க நல்ல பாட்டு-கேட்டு போங்க 
(MUSIC)
ராகத் தோடத் தாங்க-நல்ல பாட்டு பாடுவோங்க
அம்மா ..  அய்யா 
ராகத் தோடத் தாங்க-நல்ல பாட்டு பாடுவோங்க
சந்தத்தோட பாடுவோம்-ஏ..மாத்த-மாட்டோம் வாங்க-வாங்க
வாங்க-அம்மா சும்மா வாங்க-அய்யா
அம்மா வாங்க-அய்யா வாங்க நல்ல பாட்டு-கேட்டு போங்க 
(MUSIC)
தில்லாலங்கடி டப்பாங்குத்து பாடிக் காட்ட வந்தோங்க
(Beats)
தில்லாலங்கடி  டப்பாங்குத்து பாடிக் காட்ட வந்தோங்க
சளைக்காம கெத்து-காட்டி பாட நாங்க வந்தோங்க
(Beats)
சளைக்காம கெத்து-காட்டி பாட நாங்க வந்தோங்க
அற்புதமா கத்துக்கிட்டே பாடிக் காட்ட வந்தோங்க
(Beats)
அற்புதமா கத்துக்கிட்டே பாடிக் காட்ட வந்தோங்க
சங்கத்தோட பாட்டுத்தாங்க தயங்கித் தயங்கி நிக்காமலே
வாங்க-அம்மா சும்மா வாங்க-அய்யா
அம்மா வாங்க-அய்யா வாங்க நல்ல பாட்டு-கேட்டு போங்க
கூடிப் பாடுவோங்க கத கூறிப் பாடுவோங்க (2)
அய்யா-அம்மா-வாங்க நல்ல பாட்டு கேட்டு போங்க

ஆமா தில்லாலங்கடி டப்பாங்குத்தெல்லாம் சரிதான். முறையான கர்னாடக சங்கீதம் பாடுவீங்களா
அதென்ன அப்படிச் சொல்லிட்டீங்க  அக்கா
ம்..சரி 
உங்க பேர் என்னக்கா  ?
அட..என் பேரு எதுக்கு இப்போ ?

சும்மா சொல்லுங்கக்கா.காரணமில்லாமக் கேப்பனா ?
என் பேரு பைரவி. அதுக்கென்ன இப்போ ?
பாருங்க இப்போ உங்க பேர்லயே ஒரு ராகம் பாடுறேன்

(விருத்தம்)
அந்த-நாள் மெல்லிசையில்  பொன்னான இன்னிசையில்
தந்ததும் நல்லிசையே கர்னாடக நல்லிசையே

பாடிடுவேனே  நன்கு-கேளேன்

பாடிடுவேனே  நன்கு-கேளேன் 
கேட்டுக்கொண்டதால்-இங்கு-தா..னே நானே
(2)
பாடிடுவேனே நன்கு-கேளேன்

கேட்கும்-யாரும் பேசாதிசையினில்
மௌனமாய்க் கற்சிலைபோ..லாயிடத் தானே
பாடிடுவேனே  நன்கு கேளேன்
(2)
கோடி கொடுத்தாலுமே ...
கோடி கொடுத்தாலுமே கிட்டுமோ இந்நேரமே
கோடி கொடுத்தாலுமே கிட்டுமோ சந்தோஷமே

ஆதலால்-நல்லிசைதனில் அமைதியை
கேட்கும் மனதில் கொடுப்பது நலமென்றே
பாடிடுவேனே நன்கு-கேளேன்
(2)
வாங்க-அம்மா-வாங்க நல்ல பாட்டு-கேட்டு போங்க   
கூடிப் பாடுவோங்க-கத கூறிப் பாடுவோங்க (2)
வாங்க-அய்யா வாங்க நல்ல பாட்டு-கேட்டு போங்க   
கூடிப் பாடுவோங்க-கத கூறிப் பாடுவோங்க (2)
வாங்க-அம்மா .. 
சும்மா வாங்க-அய்யா
அம்மா வாங்க-அய்யா-வாங்க நல்ல பாட்டு-கேட்டு போங்க

PART II
(KARAOKE contains I & II)

வாங்க-அம்மா-வாங்க நல்ல பாட்டு-கேட்டு போங்க
அம்மா வாங்க-அய்யா வாங்க நல்ல பாட்டு-கேட்டு போங்க    
வாங்க அம்மா ..
சும்மா வாங்க அய்யா
அம்மா வாங்க-அய்யா-வாங்க நல்ல பாட்டு-கேட்டு போங்க
கூடிப் பாடுவோங்க-கத கூறிப் பாடுவோங்க (2)
வாங்க அம்மா ..
சும்மா வாங்க அய்யா
அம்மா வாங்க-அய்யா-வாங்க நல்ல பாட்டு-கேட்டு போங்க
(MUSIC)
பாட்டுக்கேத்த ராகம் அந்த ராகம் கூடத் தாளம்
(SM)
பாட்டுக்கேத்த ராகம் அந்த ராகம் கூடத் தாளம்
என ஒண்ணு-கூட ஒண்ணு-கூடி சிறக்கப்-பாடு..வோங்க
(SM)
ஒண்ணு-கூட ஒண்ணு-கூடி சிரிச்சுப்..பாடு..வோங்க
வாங்க அம்மா ..
சும்மா வாங்க அய்யா

ஜோரா ..வாங்க எல்லாம் வாங்க வந்து சேந்து பாட வாங்க

No comments:

Post a Comment