சோகமும்-எதற்குத் தனிமையும்-எதற்கு
கவலைகள் மறந்தே சிரிப்போம் வா
சங்கத்தின்-மடியில் இணக்கத்தின்-பிடியில்
இணைபிரியாமல் இருப்போம் வா
(SM)
சோகமும்-எதற்குத் தனிமையும்-எதற்கு (2)
கவலைகள் மறந்தே சிரிப்போம் வா
சங்கத்தின்-மடியில் இணக்கத்தின்-பிடியில் (2)
இணைபிரியாமல் இருப்போம் வா (2)
(MUSIC)
கம்பன்-கதையோ ஏட்டுடனே சங்கக்-கதையோர் கூட்டுறவே (2)
என்றும் அழியாப் பாட்டினிலே-வா சொல்வோம் அதைநாம் நாட்டினிலே
நித்தம் நகரில் உடனே-பரிந்து வந்தே உதவும் சேவை-புரிந்து
சங்கம் தனிலே அன்பால்-கலந்து
என்றும் இருப்போம் பண்பால்-சிறந்து
என்றாகவே-நற் பண் பாடுவோம் ஒன்றாகியே-நாம் கொண்டாடுவோம்
சோகமும்-எதற்குத் தனிமையும்-எதற்கு கவலைகள் மறந்தே சிரிப்போம் வா
சங்கத்தின்-மடியில் இணக்கத்தின்-பிடியில் இணைபிரியாமல் இருப்போம் வா
(MUSIC)
செல்வம்-அழியும் ஓர்நொடியில் முதுமைப்-பருவம் நோய் நொடியில் (2)
என்றே இருக்கும் இவ்வுலகில் வாழும்-ஒருமை நம்வடிவில்
அன்பின் மழையால் இதயம்-நனைய
எங்கும் உளதோ அதற்கோர்-இணையே
என்றும் ஒருமை நினைப்பால்-உழைப்போம்
சங்கம் தனிலே ஆல்போல்-தழைப்போம்
என்றாகவே நற்-பண் பாடுவோம் ஒன்றாகியே நாம்-கொண்டாடுவோம்
(BOTH)
(BOTH)
சோகமும்-எதற்குத் தனிமையும்-எதற்கு கவலைகள் மறந்தே சிரிப்போம் வா
சங்கத்தின்-மடியில் இணக்கத்தின்-பிடியில் இணைபிரியாமல் இருப்போம் வா இணைபிரியாமல் இருப்போம் வா
ம்..ஹ்ஹுஹஹ்ம்ஹ்ம் ஹ்ம்ஹ்ம்ஹ்ம் (3)
No comments:
Post a Comment