Monday, December 16, 2019

134. சர்ச்சை இலை(பச்சைக் கிளி முத்துச் சரம்) ****


(Aligned to KARAOKE)

சர்ச்சை-இலை மோதல்-இலை என்றே-உளோர் யாரோ
(SM)
சர்ச்சை-இலை மோதல்-இலை என்றே-உளோர் யாரோ
ப்ரேமை தன்னை உள்ளம்-தனில்  கொண்டார் எவர் தானோ
(SM)
ஒன்றே-மனம் நன்றே-குணம் என்றே-உளோர் யாரோ.. ஆ
ஒன்றே-மனம் நன்றே-குணம் என்றே-உளோர் யாரோ
சங்கம்-எனும் இல்லம்-தனில் வாழும்-இவர் தானோ
ஒன்றே-மனம் நன்றே-குணம் என்றே-உளோர் யாரோ
சங்கம் என்னும் இல்லம்-தனில் வாழும்-இவர் தானோ
 (MUSIC)
முள்ளில்லாத பாதை-செய்து செல்லும்-கால்கள் கொண்டு 
மாசில்லாத அன்பில்-சேவை செய்யும்-கைகள் கொண்டு
எண்ணம்-போல எல்லாம்-என்ற வாக்கில் உண்மை-கண்டு
 சங்கம்-வாழ நெஞ்சத்-தூய்மை கொண்டோர்-தானே இங்கு 

என்றேயாக வாழ்வினில் துன்பம்-தோன்றுமோ (2)
நானே-எனும் பாழும்-குணம் இவ்விடம் தங்கிடுமோ  
சர்ச்சை-இலை மோதல்-இலை என்றே-உளோர் யாரோ
ப்ரேமை தன்னை உள்ளம்-தனில்  கொண்டார்-எவர் தானோ
(MUSIC)
வெல்லப்பேச்சு நல்லப்-பார்வை நெஞ்சம்-பூவின் வெண்மை
சொல்லப்போகும் பாடல்-மூலம் கேட்கப்போகும் உண்மை
சொல்லில்லாத பாடல்-கூட பாரில்-ஒன்று உண்டு 
உள்ளம்-தோறும் வாழும்-ஆத்ம ராகம் என்று- நின்று
ஆத்ம ராகம் ஒன்றுதான் இங்கே பாடுவோம் 

அன்பு ராகம் ஒன்றுதான் இங்கே பாடுவோம் 
ஒன்றானவர் நன்றாவதைப் பாடலில் விளக்கிடுவோம்
ஒன்றே-மனம் நன்றே-குணம் என்றே-உளோர் யாரோ
சங்கம் என்னும் இல்லம்-தனில் வாழும்-இவர் தானோ
 (MUSIC)
சங்கக்கால பாடல்-போல இன்றும்-கூட உண்டு 
என்றே-கூற நன்றே-தோன்றும் சங்கப்பாடல் இன்று
என்றும்-வாழும் அந்தக்கால பாடல்-மெட்டைக் கொண்டு 
சங்கம்-வாழ்க என்றே-கூறி தந்தோம்-பாடல் நன்கு
அந்தப்பாடல் கேட்கலாம் என்றே ஓடிவா
அந்தப்பாடல் பாடலாம் இங்கே ஓடிவா
என்றே-வரும் பாடல்களை கேட்பதும் சுகமல்லவோ
ஒன்றே-மனம் நன்றே-குணம் என்றே-உளோர் யாரோ
சங்கம் என்னும் இல்லம்-தனில் வாழும்-இவர் தானோ
சர்ச்சை-இலை மோதல்-இலை என்றே-உளோர் யாரோ
ப்ரேமை தன்னை உள்ளம்-தனில்  கொண்டார்-வர் தானோ
(BOTH)
அஹ்ஹஹ்ஹஹா ஒஹ்ஹஹ்ஹொஹோ  
லல் லல் லலல் ல லா லா....
அஹ்ஹஹ்ஹஹா ஒஹ்ஹஹ்ஹொஹோ 
லல் லல் லலல் ல லா லா....

முதல் பக்கம்




No comments:

Post a Comment