Tuesday, December 17, 2019

135. கையோடு கைசேர்க்க(கையோடு கைசேர்க்கும் காலங்களே) **




ஆ.ஆ..ஆ ஆ.ஆ...ஆ.ஆ..ஓ ஓ .ம்.ம்ம் ..ஓ ஓ

கையோடு கைசேர்க்க வாருங்களேன் 
எல்லோரும்-ஒன்றாகக் கூடுங்களேன்
(2)
இந்நன்னாளில்-உங்கள் அன்பு-ராகங்களை நெஞ்சிலேந்தி வருக
ஆசையோடு-உரு..வான-பாடல்களை இசையைக்கூட்டித் தருக
(2)
கையோடு கைசேர்க்க வாருங்களேன் 
எல்லோரும் ஒன்றாகக் கூடுங்களேன்
(MUSIC)
நான்-வேறு நீ-வேறு இல்லாச் சங்கம் 
(SM)
நான்-வேறு நீ-வேறு இல்லாச் சங்கம்
நீர்ச்-சோறு என்றாலும் ஒன்றாய் உண்ணும் 
(1+SM+1)
தெய்வீகப்-பண்பு நாம்-கொண்டாடும் அன்பு 
என்றென்றும் உண்டன்றோ எந்நாளும் இங்கு
ஆஹா ஓஹோ லாலா ஆஹா
நல்ல-பாடல்களை சங்க-மேடைதனில் இன்று-பாட வருக 
அந்த-நினைவுகளை பின்னர்-எண்ணிப்-பெரும்
இன்பம்-என்றும் பெறுக
கையோடு கைசேர்க்க வாருங்களேன் 
எல்லோரும்-ஒன்றாகக் கூடுங்களேன்
(MUSIC)
நம்வாழ்வு நன்றாகும் ஒன்றாகவே 
இந்நாளும் எந்..நாளும் பொன்னாகுமே
(2)
நம் கண்போலச் சங்கம் என்..றே-காக்க வேண்டும்
நற்-பண்போடும் நட்போடும் நாம்வாழ வேண்டும்
வேண்டும்.. வேண்டும்.. வேண்டும்.. வேண்டும்..
நல்ல-பாடல்களை சங்க-மேடைதனில் இன்று-பாட வருக 
அந்த-நினைவுகளை என்றும்-எண்ணிப்-பெரும்
இன்பம்-தன்னைப் பெறுக
கையோடு கைசேர்க்க வாருங்களேன் 
எல்லோரும்-ஒன்றாகக் கூடுங்களேன்




No comments:

Post a Comment