Thursday, December 19, 2019

138. எங்களுக்கும் பாடவரும் (எங்களுக்கும் காலம் வரும்) **




தந்தானே தானே-தந்தானே தந்தானே தானேனேனா (2)
ஓ.ஓ
தந்தானே தானே-தந்தானே தானே தந்தானேனின்னானே
தானே-தந்தானேனின்னானே தானே-தந்தானேனின்னா..
(SM)
எங்களுக்கும் பாடவரும் என்றுலகம் காட்ட ஸ்வரம் 
பாடுகிறோம் என்றெவரும் எண்ணிவிடாதீர்
எங்களுக்கும் பாடவரும் என்றுலகம் காட்ட ஸ்வரம் 
பாடுகிறோம் என்றெவரும் எண்ணிவிடாதீர்
(MUSIC)
தந்தத்தானே தந்தானா தந்தத்தானே தந்தானா ஆ....
பலநாள் தினமும் ஒன்றாய்க்  கூடி வந்தோம்  
அழகாய் இசையைப் பாடிப் பயின்று வந்தோம்   
பாடல் வரிகள் படியப்  பாடிவந்தோம் 
ராகம் தாளம் படியே  பாடிவந்தோம் 
இசையுடனே இசைவினையும் வரியுடனே புரிதலையும் 
படித்ததனால் உங்களுடன் பகிர வந்தோமே
எங்களுக்கும் பாடவரும் என்றுலகம் காட்ட ஸ்வரம் 
பாடுகிறோம் என்றெவரும் எண்ணிவிடாதீர்
(MUSIC)
தந்தத்தானே-தந்தானா தந்தத்தானே-தந்தானா ஆ....
அடுப்பு சமையல் என்றே ஆழ்ந்து வந்தோம்
குழம்பு பொரியல் என்றே வாழ்ந்து வந்தோம்
தினமும் சமையல் வீட்டில் செய்து வந்தோம் 
மனதின் அன்பை அதிலே பெய்து வந்தோம் 
வீட்டில்-சுவை தந்தது-போல் பாட்டில்-இசை தந்திடுவோம் 
என்று-மனம் எண்ணியதால் பாடவந்தோமே
எங்களுக்கும் பாடவரும் என்றுலகம் காட்ட ஸ்வரம் 
பாடுகிறோம் என்றெவரும் எண்ணிவிடாதீர்
(SM)
அன்பில்-வரும் இன்னமுது நாங்கள்-தரும் கானமிது 
ஆ.. 
பாடத் திகழ் சங்கப்புகழ் வாழிய நீடு 
ஆ..
பாடத் திகழ் சங்கப்புகழ் வாழிய நீடு 
வாழிய நீடு..
ஆ..

சங்கத்திலே ஆண்டுவிழா நெஞ்சத்திலே என்றுமிலா
ஆனந்தமே அனைவரும்-நாம் அனுபவிப்போமே
(2)


No comments:

Post a Comment