Tuesday, March 1, 2022

148. ஊர் காணவே(பூ மாலையில்) ****


ஆ..ஆ..ஆ..ஆ
ஊர் காணவே ஜோர் ஜோர் என சங்கத் தேர் தேர் தேரோடுது
கைகள் நூறு சேர்ந்ததாலது நின்றிடாமலே ஓடுது
ஊர் காணவே ஜோர் ஜோர் என சங்கத் தேர் தேர் தேரோடுது
கைகள் நூறு சேர்ந்ததாலது நின்றிடாமலே ஓடுது
(MUSIC)

நெஞ்சம் ஆயிரம் சேர்ந்தது சங்கம் .. ஆ..ஆ..ஆ..ஆ
உண்டல்லவோ அதில் யாவரின் பங்கும் .. ஆ..ஆ..ஆ..ஆ
நெஞ்சம் ஆயிரம் சேர்ந்தது சங்கம்
உண்டல்லவோ அதில் யாவரின் பங்கும்
நானே செய்தேன் என்றால் சிறுமை (2)
நாமே செய்தோம் என்றால் பெருமை
நாமே செய்தோம் அது தான் உண்மை
ஊர் காணவே ஜோர் ஜோர் என சங்கத் தேர் தேர் தேரோடுது
கைகள் நூறு சேர்ந்ததாலது நின்றிடாமலே ஓடுது
(MUSIC)

என்றும் தான் எனதென்பவர் எண்ணம்..ஆ..ஆ..ஆ..ஆ
அழிவைத் தான் தரும் என்பது திண்ணம்..ஆ..ஆ..ஆ..ஆ
என்றும் தான் எனதென்பவர் எண்ணம்
அழிவைத் தான் தரும் என்பது திண்ணம்
இணைந்தால் சங்கம் பிரிந்தால் பங்கம் (2)
இதைத் தான் உணர்ந்தால் உண்டோ துன்பம் 
இதைத் நாம் உணர்ந்தால் உண்டோ துன்பம்
ஊர் காணவே ஜோர் ஜோர் என சங்கத் தேர் தேர் தேரோடுது
கைகள் நூறு சேர்ந்ததாலது நின்றிடாமலே ஓடுது
நின்றிடாமலே ஓடுது
 



முதல் பக்கம்


Wednesday, February 16, 2022

147.நாவில் இனிமை மனதினில் பொறுமை(பாலும் பழமும் கைகளில் ஏந்தி) **

ம்..ம்ம் 
(Interlude)
நாவில் இனிமை மனதினில் பொறுமை யாவும் விட்டுத் தருவதில் பெருமை 
கூடி இருக்கும் மனிதர்கள் அருமை ஒன்றினால் தான் சங்கத்தில் இனிமை
நாவில் இனிமை மனதினில் பொறுமை யாவும் விட்டுத் தருவதில் பெருமை 
கூடி இருக்கும் மனிதர்கள் அருமை ஒன்றினால் தான் சங்கத்தில் இனிமை
(music)

உயர்ந்த தங்கம் அது போல் பழமை கொண்ட சங்கம் அது தான் புதுமை (2)
இணைந்த கையால் ஓங்கும் ஒருமை அதனை மறந்தால் என்றும் தனிமை (2)
நாவில் இனிமை மனதினில் பொறுமை யாவும் விட்டுத் தருவதில் பெருமை 
கூடி இருக்கும் மனிதர்கள் அருமை ஒன்றினால் தான் சங்கத்தில் இனிமை
(music)

துடிக்கும் இளைஞர் செயல்படும் திறமை இருக்கு அதனால் சங்கத்தில் பெருமை (2)
எதற்கும் தான் எனச் சொல்லிடும் சிறுமை அற்றது அன்றோ உண்மையில் திறமை (2) 
நாவில் இனிமை மனதினில் பொறுமை யாவும் விட்டுத் தருவதில் பெருமை 
கூடி இருக்கும் மனிதர்கள் அருமை ஒன்றினால் தான் சங்கத்தில் இனிமை
(music)

செயலில் துணிவு கொண்டால் திறமை  சொல்லில் பணிவு ஒன்றால் பெருமை (2)
கல்லின் பொறுமை அதுவே நன்மை வெல்லும் மேன்மை முடிவாய்த் தருமே (2)
நாவில் இனிமை மனதினில் பொறுமை யாவும் விட்டுத் தருவதில் பெருமை 
கூடி இருக்கும் மனிதர்கள் அருமை ஒன்றினால் தான் சங்கத்தில் இனிமை

ம்..ம்ம்


முதல் பக்கம்


Friday, September 10, 2021

152. ஆயிரம் ஆயிரம்(மௌனமே பார்வையால்) **


ஆயிரம் ஆயிரம் கை சேர்ந்து இழுக்கும் தேரு

யாவரும் ஒன்றுதான் இந்த சங்கம் தன்னில் பாரு
(1+SM+1)
(MUSIC)

பட்டம்-பதவி தன்னை திட்டம்-வகுத்தே கொண்டிடாத மாந்தர்களால் வளர்  சங்கம் நலச் சங்கம்
பட்டம் பதவி தன்னை திட்டம் வகுத்தே கொண்டிடாத மாந்தர்களால் வளர் சங்கம்
சட்டம்-எனவே இங்க..னைத்தும் பொதுவாய்க் கொண்டு 
இயங்கப் பாடுபட என்றும் எண்ணும்
சங்க ஒருமை காத்திடவே என்றும் எண்ணும்
ம்..ஆயிரம் ஆயிரம் கை சேர்ந்து இழுக்கும் தேரு
யாவரும் ஒன்றுதான் இந்த சங்கம் தன்னில் பாரு
(MUSIC)

ஒற்றுமையுள்ள நல் அங்கத்தினரால் பலம் 
என்றும் கொள்ளும் நல்ல நலச் சங்கம் நலச் சங்கம்
(SM)
ஒற்றுமையுள்ள நல் அங்கத்தினரால் பலம் 
என்றும் கொள்ளும் எங்கள் நலச் சங்கம்
அங்கம் வகிக்கும் பலர் கொண்ட பொறுப்பை 
என்றும் திறமையாய் வகிக்கும் பொதுச் சங்கம்  
பலர் திறமையாய் வகிக்கும் பொதுச் சங்கம்
ம்..ஆயிரம் ஆயிரம் கை சேர்ந்து இழுக்கும் தேரு
யாவரும் ஒன்றுதான் இந்த சங்கம் தன்னில் பாரு




முதல் பக்கம்


151. கூடி வாழ்ந்திடப் பொறுமை (காதல் ராஜ்ஜியம் எனது) ***

 

கூடி வாழ்ந்திடப் பொறுமை 
என்றும் தேவை அது ரொம்ப அருமை  
அதைக் காட்டி வாழ்பவர் திறமை 
ஒன்றினாலே தான் சங்கப் பெருமை
(2)
(SM)
அந்நாளில் தோன்றிய சங்கம் 
எந்நாளும் மின்னிடும் தங்கம் 
மேலும் மேலது மெருகேறி  
நிற்க உண்டிங்கு எல்லோரின் பங்கும்  
(2)
கூடி வாழ்ந்திடப் பொறுமை 
என்றும் தேவை அது ரொம்ப அருமை  
அதைக் காட்டி வாழ்பவர் திறமை 
ஒன்றினாலே தான் சங்கப் பெருமை
(MUSIC)

சென்றோடும் பாரு நம் சங்கம் எனும் தேரு 
எல்லோரின் உழைப்பே அது 
என்கை அதில் உன்கை என ஓன்றாகிடும் நட்பே 
நையாத கயிறாகுது 
(2)
எந்நாளும் நான் எனும் நினைப்பு 
கொண்டோரையும் மனம் பொறுத்து   
நெஞ்சில் ஆல் என இருப்போரால் 
என்றும் உண்டாவதாம் சங்கச் சிறப்பு  
கூடி வாழ்ந்திடப் பொறுமை 
என்றும் தேவை அது ரொம்ப அருமை  
அதைக் காட்டி வாழ்பவர் திறமை 
ஒன்றினாலே தான் சங்கப் பெருமை
(MUSIC)

என்றும் இதம் கூறும் விதம் சங்கம் தனில்-வாழும் 
பேராலே இன்பம் எழும் 
சங்கப் பணி செய்தார் என கைத்தட்டிடும் சத்தம் 
ஒன்றாலே தோன்றும் இதம்
எல்லாரும் கொண்டிட்ட பொறுப்பு 
ஒனறாலன்றோ சங்கச் சிறப்பு 
எனது-நான் எனும் அஹங்காரம் 
என்றும் நில்லாது போய்விடும் விரைந்து  
கூடி வாழ்ந்திடப் பொறுமை 
என்றும் தேவை அது ரொம்ப அருமை  
அதைக் காட்டி வாழ்பவர் திறமை 
ஒன்றினாலே தான் சங்கப் பெருமை


முதல் பக்கம்


Wednesday, May 13, 2020

149. அட-ஒண்ணும் (புதுப் பெண்ணின் மனசத் தொட்டுப் போறவரே) **



அட-ஒண்ணும் கொறஞ்சு-விட போறதில்லே 
கொஞ்சம்-சங்கீதம் கேட்டுப்புட்டு போங்க

அட-ஒண்ணும் கொறஞ்சு-விட போறதில்லே 
கொஞ்சம்-சங்கீதம் கேட்டுப்புட்டு போங்க
இந்த கீதம் தினமும்-பாடப் போவதில்லே 
அதை நெஞ்சத்தில் எண்ணிக் கேட்டுப் போங்க
(2)
நெஞ்சத்தில் எண்ணிக் கேட்டுப் போங்க
(MUSIC)
இந்த சங்கம் என்னுமோர்  இடத்தில்-சேராமல் 
தனித்து நகர்-தனிலே… சேர்ந்து வாழாமலே
(1+SM+1)
தனக்குத் தானாய் உள்ளே இல்லாமலே (2) 
சங்கத்திருந்து-ஐயா சந்தித்துக் கொண்டாலுமே (2)
அட-ஒண்ணும் கொறஞ்சு-விட போறதில்லே 
கொஞ்சம்-சங்கீதம் கேட்டுப்புட்டு போங்க
இந்த கீதம் தினமும்-பாடப் போவதில்லே
அதை நெஞ்சத்தில் எண்ணிக் கேட்டுப் போங்க
நெஞ்சத்தில் எண்ணிக் கேட்டுப் போங்க
(MUSIC)
 உன்னைச் சுத்தி நடக்கிறதைக் காணாமே போகாதே
இந்த-மெல்லிசையைக்-கேட்டே சுவைத்து-போவாயே
(1+SM+1)
இன்ப இசையை ஏனோ மறுக்கிறாய் (2)
கற்ற பலன்-இதுவோ ஒருமை எல்லார்க்கும் வாய்க்காதையா   
ஒன்றி பலருடன்-தான் இசைக்க  எந்நாளும் கிட்டாதய்யா
அட-ஒண்ணும் கொறஞ்சு-விட போறதில்லே 
கொஞ்சம்-சங்கீதம் கேட்டுப்புட்டு போங்க
இந்த கீதம் தினமும்-பாடப் போவதில்லே
அதை நெஞ்சத்தில் எண்ணிக் கேட்டுப் போங்க
நெஞ்சத்தில் எண்ணிக் கேட்டுப் போங்க






Wednesday, April 15, 2020

145. நாம் பெற்ற சங்கம்(நான் பெற்ற செல்வம்) **


நாம்-பெற்ற சங்கம் பொன்போல செல்வம் 
வேற்றுமை-நோயோ பொல்லாத பங்கம் 
(2)
நாம்-பெற்ற சங்கம்
(MUSIC)
ஒன்றாய் இருந்தால் உயர்-பீடு 
பகையால் புகைந்தால் பெரும்-கேடு
(2)
என்று-நினைந்தே இருப்போமே (2)
என்றும் ... அதுதான் ... உயர்வாக்கும்
என்றும் அதுதான் உயர்வாக்கும்
கேள்… நாம்-பெற்ற சங்கம் பொன்போல செல்வம் 
வேற்றுமை-நோயோ பொல்லாத பங்கம் 
நாம்-பெற்ற சங்கம்
(MUSIC)
அன்றே சொன்னார் பாரதியார் 
ஒற்றுமை மேன்மையைப் பேரழகாய்
(2)
நன்றே சொன்னார் மூலர்-பிரான் 
(SM)
நன்றே சொன்னார் மூலர்பிரான்
மானிடரில் யாவருமே ஓர்-குலமே என்றே
நாம்-பெற்ற சங்கம் பொன்போல  செல்வம் 
வேற்றுமை-நோயோ பொல்லாத பங்கம்
நாம்-பெற்ற சங்கம்